பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 திருமந்திரம்

128. ஆயத்துள் நின்ற அறுசமயங்களும்

காயத்துள் நின்ற கடவுளேக் காண்கிலா மாயக்குழியில் விழுவர் மனேமக்கள் பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற

வாறே. (1530) உணர்வில திருந்தாத புறச்சமயங்கள் கடவுளது உண்மை யினே உணரும் உணர்வுடையன அல்ல என்கின்றது.

(இ - ள்) சமயத் தொகுதியுட் கூறப்பட்டு நின்ற புறச் சமயங்கள் ஆறும் உயிர்களின் உடம்பினுள்ளே கோயில் கொண்டு எழுந்தருளிய பரம்பொருளைக் கண்டுணரமாட்டா வாயின. அச்சமயங்களைப் பற்றி நடப்போர் மனைவிமக் கள் என்னும் பாசபந்தத்தில் அகப்பட்டு இவ்வுலக வாழ்க்கையில் இடர்ப்படுமாறுபோலவே மறுமையினும் பொய்ம்மையாகிய பாசத்துள் விழுந்து வருந்துவர் எ-று.

ஆயம் - கூட்டம்; சமயத்தொகுதி. மணிமேகலையில் உலோகாயதம், பெளத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம் என்னும் ஆறும், சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, பூதவாதி என்னும் ஏழும் மதக்கொள்கை களாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பூதவாதி கூறு வன உலோகாயதத்துள் அடங்குதலின் பிற்கூறிய மதங் களும் ஆறேயாம். இனி திவாகரத்துள் வைசேடிகம், நையாயிகம், மீமாஞ்சை, ஆருகதம், பெளத்தம், உலோகாயதம் என்பன அறுசமயங்கள் எனக் கூறப் பட்டன. இவை ஆறும் கடவுட்கொள்கையில்லாத சமயங்களாதலின் புறச்சமயங்களாயின. இருமுச் சமயத் தொருபேய்த்தேர் என்பது திருவாசகம். காயம் - உடம்பு 'உடம்புளே யுத்தமன் கோயில்கொண்டானென்று உடம் பினே யானிருந்தோம்புகின்றேனே. எனத் தமது அருளனு