பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

189


பவத்தை முன்னுரைத்தவாறே 'காயத்துள் நின்ற கடவுள் என ஈண்டும் எடுத்துரைத்தார். காண்கிலா - காணும் ஆற்றலற்றன. கில் - ஆற்றலுணர்த்தும் இடை நிலை . தெய்வங் கொள்கையில்லாத அறுசமயத்தவரும் அச்சமயங்களிற் கூறப்படும் உண்மையல்லாதவற்றை இன் பந்தரும் மெய்க்கொள்கைகள் என்று நம்பித் தம் வாழ்நாள் முழுவதும் முயன்று முயன்று பொய்த் தோற்றமாய் ஒழிந்த அவ்வின் பத்தினைப் பெருமல் குடும்ப பாசத்துள் அகப்பட்டு வருந்தியவாறே மறுமையிலும் எல்லே யற்ற துன்பத்துள் உழல்வர் என் பார், மனமக்கள் பாசத் துள் உற்றுப் பதைக்கின்றவாறே மாயக் குழியில் விழுவர்? என்றர். மாயக்குழி - பொய்மையாகிய பாசத்தளே.

127. உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன்

என்பவர்க் குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன்

எம்மிறை உள்ளத்தும் இல்லை புறத்தில்லே என்பவர்க் குள்ளத்தும் இல்லே புறத்தில்லே

தானே. (1532) கடவுளுண்டு என்று நம்பியவர்களே அம்முதல்வனது திரு வருளே எளிதிற் பெற்றுப் பயனுறுவர் என்கின்றது.

(இ - ள்) எம் இறைவனுகிய சிவபெருமான் என் நெஞ் சிடத்தும் எழுந்தருளியுள்ளான் உலகின் புறத்தும் எழுந் தருளியுள்ளான் என்னும் தெளிவுடையார்க்கு அம்முதல்வன் அவர்களின் உள்ளத்தின் உள்ளிருந்து உறுதி நல்குவ துடன் உலகின் புறத்தும் நீக்கமறக் கலந்து நின்று நலஞ்செய்கின்றன் . இறைவன் என்பதொரு முதற்பொருள் என் நெஞ்சத்தும் இல்லே . உலகின் புறத்து எவ்விடத்தும் இல்லே என்னும் பாழ்ங்கொள்கையினர்க்கு அவர்கள்