பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 திருமந்திரம்

நெஞ்சத்துள் இருந்து உறுதி நல்குவதுமில்லே உலகின் புறத்துக் கலந்து நின்று இன்பஞ் செய்வதும் இல்லே. 6f-Ε) -

உள்ளத்தும் புறத்தும் என்னும் உம்மைகள் முறையே எதிரது தழி இயும் இறந்தது தழி இயும் நின்றன . உள்ளத்தும் புறத்தும் உள்ளான் என்பார் தெய்வங்கொள்கையில் உறுதி பெற்ற நல்லறிஞர்கள். உள்ளத்தும் புறத்தும் இல்லே என்ப வர் பாழ்ங்கொள்கையினராகிய நாத்திகர்கள். நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே? எனவரும் அப்பர் அருள் மொழி இன்னுேரை நோக்கிக் கூறியதாம். மந்திர மும் தேவும்......மெய்யென்னின் மெய்யாய் விளையும் பொய் யென்னிற் பொய்யாகிப்போம்? என்ருர் ஒளவையாரும், 'ஈன்ருளுமாய் எனக்கெந்தையுமாய் என்ற திருவிருத்தம் உள்ளத்தும் புறத்தும் நின்று இறைவன் செய்தருளும் உதவியைக் குறிப்பதாகும்.

128. ஆறுசமயமுங் கண்டவர் கண்டிலர் ஆறுசமயப் பொருளும் அவனலன் தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின் மாறுதலின்றி மனே புக லாமே. (1533)

இறைவன் சமங்கடந்த பழம்பொருள் என்கின்றது.

(இ- ள்) ஆறு சமயங்களையும் ஆராய்ந்தறிந்தவர்கள் பரம்பொருளேக் காணப்பெற்றிலர். ஆதலால் அறுசமயங் கள் கூறும் பொருள்களுள் அடங்கியவன் அம்முதல்வன் அல்லன். சொலற்கரிய சூழலாய்? என்றவாறு சமயங் களின் சொல்லேயும் ஆராய்ச்சியையுங் கடந்து அப்பாற் பட்டு விளங்கும் செம்பொருளாகிய சிவம் உண்டு என்ப தனே நும்முள்ளத்தே ஆராய்ந்துணர்வீராக. அங்ங்னம் ஆராய்ந்து துணிவீராக. துணிந்தபின் அச்சுமாறுதலாகிய