பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

191


பிறப்பிறப்பின்றி என்றும் ஒரு நிலேய தாய்த் தங்கி மகிழும் வீடுபேற்றினே அடைந்து இன்புறலாம் எ~று.

ஆறுசமயம் - உலோகாயத முதலாக முற்கூறப்பட்ட புறச் சமயங்கள்; என்றது அவற்றின் தத்துவக் கொள்கை களே விரித்துக் கூறும் நூல்களே. காணுதல் - கற்றுணர்ந்து தெளிதல். தேறுதல் - ஆராய்தல். தெளிதல் - துணிதல். 'தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பதோர் உள்ளத் தேறல்’ என்பர் அப்பர். மாறுதல் - பிறப்பிறப்பில் அகப் பட்டு அலேதல். மாறுதலின் றிப்படும் மனேயென்றது பேரா வியற்கையாகிய வீட்டினே. களிப்புக் கவற்சிகளும் பிறப்புப் பிணி மூப்பிறப்புக்களும் முதலாயின இன்றி உயிர் நிரதிசய இன்பத்ததாய் ஒரு நிலையில் அமைந்தே விடும் புக்கிலாக விளங்குவது வீடுபேறு என்பார் மாறுதலின்றி மனே புகலாமே? என்ரு ர்.

கிராகாரம்

129. பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி

தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர் நீங்கிய வண்ணம் நினேவு செய்யாதவர் ஏங்கி யுலகில் இருந் தழுவாரே. (1551) இறைவனே உள்ளத்துள்ளே அருளுருவின கைத் தியா னிப்பார் எய்தும் சிறப்பும் அங்ங்ணம் நினேயாதார் எய்தும் இழிவும் உணர்த்துகின்றது.

(இ - ள்) அழகு பொருந்திய கொன்றைமலர் மாலேயை யணிந்த படர்ந்து விரிந்த சடையினேயுடைய இறைவன் திருவடியாகிய அருள் வெள்ளத்தைத் தம் நெஞ்சத்தே தாங்கியவராய் இடைவிடாது தியானிக்கும் மாந்தர் தனக்குவமையில்லாதா கிைய சிவனுக்குச் சமமானவராய்