பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19? திருமந்திரம்

மனக்கவலையினை மாற்றி மகிழ்வர். அம்முதல்வனது அருள் நெறியினை நீங்கிய நிலையில் அம்முதல்வனே நினையாது தம் மனம்போனபடி யொழுகுவோர் இவ்வுலகில் துன்பங்களுட் பட்டு ஏங்கித் தம் மனக்கவலைகளை மாற்றும் துணைகாணுது வறிதேயிருந்து அழுது புலம்பும் அவலநிலையினராவர் எாறு.

பாங்கு - அழது. படர்தல் - கொடிபோல் நீண்டு பர வுதல். சடையான் - சிவன்; ஞானமயமானவன் என் பது குறிப்பு. அடி என்றது, அவனது அருளுருவினே. அவனருளின் எல்லேயற்ற பெருக்கத்தினைப் பொறுத்துத் தாங்கவல்ல உரவோர் என்பார் தாங்கும் மனிதர் என்ருர். நேர்ஒத்தல் ஆவது தனக்குவமை யில்லாத தனிமுதல்வனே யொத்து ஞானப் பெருக்கமும் அருட்பெருக்கமும் உடைய ராதல். மனிதரிற்றலேயான மனிதர் என அப்பர் அடிகள் குறித்தது இப்பெருமக்களேயே நீங்குதல் - இறைவனது ஒழுக்கநெறியாகிய வரம்பினைக் கடத்தல். இருத்தல் - துன்பத்தினின்றும் உய்ந்துசெல்ல உபாயங்காணுது கவலை யுற்றிளேத்துச் செயலின்றியிருத்தல். அழுதல் - துன்பத் தைப் பொறுக்கும் மனவலியின்றிக் கண்டார் இகழும் வண்ணம் புலம்பி அரற்றுதல்.

திருப்புன்னையங்கானல் சிந்தியாயாயின்

இருப்பின்னயங்காந் திளைத்து’

என்பது ஐயடிகள் அருளிய அறிவுறுத்தல்.

130. இருந்தழுவாரும் இயல்பு கெட்டாரும்

அருந்தவ மேற்கொண்டங் கண்ணலே

6া 6ঠটা তেfে16b

வருந்தா வகைசெய்து வானவர் கோனும் பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லே

தானே. (1552)