பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 திருமந்திரம்

பெருதார் வெறுஞ் சமயச் சடங்குகளிலேயே பயனின்றி அழுந்தியுழல்வர் என்கின்றது.

(இ - ள்) பிரணவமாகிய ஓங்காரத்தின் உள்ளொளி யாக விளங்கும் இறைவன் தம் உள்ளத்துள்ளே தோன்றப் பெற்று யானெனதெனுஞ் செருக்கொழிந்து சிவாநுபவங் கைகூடப் பெருதார் தமக்கு வரவிருக்கும் சாவினை எண் ணும் உணர்விலராய்ப் பிறவா நெறியினைச் சாரும் மது கை யிலராய் (மருளுடைய) புறச்சமய நெறிக்கண்ணே யுழன்று வாழ்விற் பயனின்றிக் கழிந்தோராவர் எ-று.

இறைவன் தன்னை மந்திரப்பொருளாய் வழிபடுவா ருள்ளத்திலே ஓங்காரமாகிய பிரணவ மந்திரத்தின் உள் ளொளியாக விளங்குபவன் என்பது, ஒன்றவே யுணர்தி ராகில் ஓங்காரத்தொருவனுகும். (4-25-9) எனவும் உய்யவென்னுள்ளத்தின் ஓங்காரமாய் நின்ற மெய்யா" எனவும் ஒளிவந்தென் னுள்ளத்தினுள்ளே யொளி திகழ அளிவந்த அந்தணனை எனவும்வரும் அருளிச்செயல்கள் இங்கு ஒப்புநோக்கத்தக்கன. ஆங்காரம் - அகங்கா ரம்; யான் என்னுஞ் செருக்கு. இத்திருமந்திரத்தை அடி யொற்றியது,

ஆங்காரமு மடங்கார் ஒடுங்கார் பரமானந்தத்தே

தேங்கார் நினைப்பு மறப்புமருர் தினைப்போதளவும் ஓங்காரத் துள்ளொளிக்குள்ளே முருகன் உருவங்கண்டு தூங்கார் தொழும்புசெய்யாரென் செய்வார்யம தூதருக்கே?? (கந்தரலங் - 55)

எனவரும் கந்தரலங்காரமாகும்.