பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு f 95

உட்சமயம்

132. ஒன்றது பேரூர் வழியா றதற்குள என்றது போல இருமுச் சமயமும் நன்றிது தீதிது வென்றுரை யாளர்கள் குன்று குரைத்தெழு நாயை

யொத்தார்களே. (1558) அகச்சமயங்கள் ஆறும் இறைவன் ஒருவனையடைதற்கு வகுத்த நெறிகளே என்பது உணர்த்துகின்றது.

(இ - ள்) சென்றடைதற்குரிய பெரிய ஊர் ஒன்றே , அதனையடையும் வழிகள் ஆறுள்ளன என்ருற்போன்று கடவுளுண்மையைக் கூறும் ஆறு சமயங்களும் ஒரு பொரு ளேயே யடைதற்குச் சாதனமாகவுள்ளன. யாம்கூறும் இதுவே நன்று பிறர் கூறும் இது தீது என்று இங்ங்னம் தம்முட் பிணங்கும் சமயவாதிகள் மலேயைப் பார்த்துக் குரைத்தோடும் நாயை யொத்தவராவர் எ-று.

அகச்சமயத்திற் கூறப்படும் உண்மைகள் புறங்கூற் ருகிய வெற்றுரைகளால் மறுக்கப்படாதன என்பதும் அவற்றின் ஒருமைப்பாட்டினை யுணராது தோற்றத்தினைக் கண்டு மருண்டு வாதித்துப் பிணங்குவோர் மலேயைக் கண்டு மருண்டு குரைத்துக்கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று பிறர் கூறும் மெய்ம்மையினே உள்ள வாறுனரும் தெளிவின்றித் தம் சொற்களேப் பயனில வாகச் செய்வோர் என்பார், குன்று குரைத்தெழு நாயை யொத்தார்களே என்ருர். ஞானமே திருமேனியாக வுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச்செய்த ஆகமங்களிலெல்லாம் கூறப்பட்ட மெய்யுணர்வுபற்றிய முடி வுகள் எல்லா ஆகமங்களினும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருளாகிய இறைவன் ஒருவனேயே நோக்கி முடியும் என்பார், ஒன்று அது பேரூர்; வழி ஆறு அதற்கு உள’ என்ருர்,