பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 திருமந்திரம்

சுத்தவடி வியல்பாக வுடைய சோதி

சொல்லிய ஆகமங்களெலாம் சூழப் போயும் ஒத்து முடியுங் கூட ஓரிடத்தே

ஒருபதிக்குப் பலநெறிகள் உளவாளு ற் போல் பித்தர் குண மதுபோல ஒருகா லுண்டாய்ப்

பின்ளுெருகா லறிவின்றிப் பேதையோ ராய்க் கத்திடும் ஆன்மாக்களுரைக் கட்டிற் பட்டோர் .

கனகவரை குறித்துப்போய்க் கடற்கே வீழ்வார் என வரும் சித்தியார் (பரபக்கம் - 9) இங்கு நினே தற்குரிய தாகும்.

133. இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்

பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர் நந்தி எத்தவம் ஆகிலென் எங்குப் பிறக்கிலென் ஒத்துணர் வார்க்கொல்லே யூர்புக

லாமே. (1568) சமய பேதங்களேயே மனத்துட்கொண்டு சமரச நெறியை நாடாதோர் வீடடைதற்குத் தகுதியிலாதார் என்கின்றது.

(இ - ள்) இறைவனேயடைதற்கு வகுக்கப்பெற்ற சமய நெறிகளில் இதுவே தவநெறி அதுவே தவநெறி என இரு வகையாக வேறுபடுத்துப் பேசும் மனமயக்கமுடையார் களைக் கண்டால் எங்கள் குருமுதல்வராகிய சிவபெருமான் அவர்தம் பேதைமையை எண்ணிச் சிரிப்பான். மக்கள் மேற்கொண்ட தவநெறியாகிய சமயம் எதுவாயிருந்தா லென்ன? அன்னேர் எந்த நாட்டில் எவ்வுருவாய்ப் பிறந் தாலென்ன? எல்லா நெறிகளும் இறைவனேயடைந்து உய்தற்கு அமைக்கப்பெற்றனவே என்னும் உண்மையை உடம்பட்டுப் பிணக்கின்றி இறைவனே உணர்ந்து போற்று வார்க்கு விரைவில் சிவமாநகரை யடைதல் எளிதாம் எ - று.