பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#98 திருமந்திரம்

முதல் பக்குவன் என்பது முடியப் பதின்ைகு உட்பிரிவுகளே யுடையது. இதன்கண் சிவகுருதரிசனம், திருவடிப்பேறு, ஞாதிரு, ஞானஞேயம், துறவு, தவம், அருளுடைமையின் ஞானம் வருதல், அவவேடம், தவவேடம், அபக்குவன், பக்குவன் என்ற தலைப்புக்களில் வைத்து ஞானசாதனங்கள் விரித்துரைக்கப்பெற்றன .

ஆன்மாக்கள் உய்ய இறைவன் தன்னடியார் திறத்தே நிகழச்செய்யும் தசகாரியம் இத்தத்திரத்திலும் 7, 8, 9-ஆம் தந்திரங்களிலும் கூறப்படும் பொருள்களால் உணர்த்தப் பெறுகின்றன .

சிவகுருதரிசனம்

சிவபெருமான் உயிர்கள் பால் வைத்த பெருங்கருணே யால் மானிடச்சட்டை த ங் கி வ ந் து நற்பொருளே உபதேசிக்கப் பொருள்களின் உண்மையை உள்ளவாறு காணுதல்.

134. பத்திப் பதித்துப் பரவும் அடி நல்கிச்

சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச் சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால் சித்தம் இறையே சிவகுரு வாமே. (1573)

உயிர்க்குயிராய் உள் நின்றுணர்த்திய சிவனே ஆசிரியத்

திருமேனி தாங்கிக் குருவாய் வந்தருள்புரிவன் என்கின்றது.

(இ - ள்) (அருச்சனை வயலுள்) அன்பாகிய விதையை விதைத்து யாவரும் பரவிப்போற்றும் திருவடியை அடி யேற்குநல்கித் தனது தூய மெய்யுணர்வுபதேசத்தால் எனது மலமாயை கன்மங்களாகிய குற்றங்கள் கெட் டொழியச் சோதனை செய்து போக்கிச் சத்தாகிய தன் இயல்பையும் அசத்தாகிய பாசத்தின் இயல்பினையும்