பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 திருமந்திரம்

135. எல்லா வுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்

நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால் எல்லாரும் உய்யக்கொண் டிங்கே

யளித்தலால் சொல்லார்ந்த நற்குருச் சுத்த

சிவமே. (1576)

உலகெலாங் கடந்தும் உயிர்க்குயிராகியும் அருளும் இறை வனே உபதேச குருவாகவும் அருள்புரிவன் என்கின்றது .

(இ.ஸ்) எல்லா வுலகங்களேயும் கடந்து அப்பாலனுக விள்ங்கும் முதல்வன் இவ்வுலகின் இப்புறத்தாகைப் பரிபாக முற்ற நல்லோருள்ளத்திலே விளங்கித் தோன்றி மிக்க திருவருளேச் சுரத்தலாலும், எல்லோரும் உய்திபெறுதலே வேண்டி ஆசிரியத் திருமேனி கொண்டு இங்கே எழுந்தருளி வந்து நன்ஞானத்தை வழங்குதலாலும் உபதேசித்தலைப் பொருந்திய நல்ல குரு தூய சிவபெருமானே யாவன்

எ-று .

பரிபாகமுடைய நல்லோர்க்கு உயிர்க்குயிராய் உள் நின்றும் புறத்தே வெளிப்படத் திருமேனி கொண்டும் சிவஞானத்தை வழங்கும் குரு சிவபெருமானின் வேறல்லன் சிவனே என்பதாம். மனத்தகத்தான் தலைமேலான்.......

கண்ணுளானே? எனவும்

அருவாகி நின்ருனை யாரறிவார் தானே

உருவாகித் தோன் ருனேல் உற்று. (சிவஞானபோதம்)

எனவும் வரும் பகுதிகள் இங்குச் சிந்திக்கத்தக்கன.