பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள் முறைத் திரட்டு 20 i

திருவடிப்பேறு

136. திருவடி வைத்தென் சிரத்த ருள் நோக்கிப்

பெருவடி வைத் தந்த பேர் நந்தி தன்னேக் குருவடி விற்கண்ட கோனேயெங் கோவைக்

கருவழி மாற்றிடக் கண்டுகொண்

டேனே. (1597)

பிறவி வேர றக் குருவின் அருளால் திருவடிப்பேறு எய்தினமை கூறுகின்றது.

(இ-ள்) அடியேனே அருட் கண்ணுல் நோக்கி என் சிரத்தில் தன் திருவடியைச் சூட்டி எங்குமாய் நீக்கமற நிறைந்திருக்கும் தனது பெரிய வடிவினை அடியேன் உளங்கொளத் தந்தருளிய பேர் நந்தியாகிய சிவபெருமா இனக் குருவின் வடிவில் எம்மனேர் காண எழுந்தருளிய பெரியோன எமது தலைவனை மீண்டும் கருவிற் செலுத்தும் பிறவிநெறியினை மாற்றிப் பிறவா நெறியாகிய பெருநெறி யிற் செல்லும் நிலேயிற் காணப்பெற்றுப் பயன்கொண்டேன்

எ-று.

அருள் நோக்கி என்சிரத்தில் திருவடி வைத்துப் பெரு வடிவைத் தந்த பேர்நந்தி என இயையும். அருள் நோக்கி - அருட்கண்ணுற் பார்த்தருளி. அத்தாவுன் அடியேனே அன்பால் ஆர்த்தாய், அருள் நோக்கிற் றீர்த்த நீ ராட்டிக் கொண்டாய் என்பது அப்பர் அருள் மொழி.

ஆகமங்கள் எங்கே அறுசமயம் தானெங்கே யோகங்கள் எங்கே யுணர் வெங்கே - பாகத் தருள் வடிவுந் தானுமா யாண்டில்னே லந்தப் பெருவடிவை யாரறிவார் பேசு. (5)

எனவரும் திருக்களிற்றுப்படியாரும்,