பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 திருமந்திரம்

நானுமென் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் தானுந்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்’

எனவரும் திருவாசகமும் நினைக்கத்தக்கன.

கருவழி மாற்றிடுதல் - கடலின் அலேபோல்தொடரும் பிறவிவழியை யடைத்துப் பிறவா நெறியினைத் தலைப் படுதல்.

திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக் கருவே ரறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை :

எனவும்,

பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா எனவும் வரும் திருவாசகத் தொடர்கள் இங்கு நோக்கத்தக்கன.

137. கழலார் கமலத் திருவடி யென்னும்

நிழல்சேரப் பெற்றேன் நெடுமா லறியா அழல்சேரும் அங்கியுள் ஆதிப்பிரானும் குழல்சேரும் என்னுயிர்க் கூடுங்

குலேந்ததே. (1600) குருவின் அருளால் திருவடி பெற்றமையால் உண்டாகிய பயன்களைக் கூறுகின்றது.

(இ- ள்) வீரக்கழல் பொருந்திய செந்தாமரை மலர் போலும் திருவடியாகிய நிழலைச் சேரப்பெற்றேன். உல கினேயளந்த நெடியோனகிய திருமாலாலும் அறியவொண் தை வெம்மை பொருந்திய தீப்பிழம்பினுள் விளங்கிய முதல்வகிைய சிவபெருமானும் அற்புதமான அமுத தாரை களாக எனது எற்புத்துளைகள் தோறும் வந்து சேர்ந் தான். (அதல்ை) அழியுந் தன்மையதாகிய எனது உடம் பாகிய கூட்டில் வைத்த பற்றும் சிதைந்தொழிந்தது. எ-று.