பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

203


குழல் - நரம்பின்துளே. ஆதிப்பிரான் குழல் தோறும் சேரும். அதல்ை உயிர்க்கூடும் குலேத்தது என்க. அற் புதமான அமுத தாரைகள் எற்புத்துளே தொறும் ஏற்றினன், உருகுவதுள்ளங் கொண்டோருருச் செய்தாங்கெனக்கு அள் ளுருக்கை யமைத்தனன்’ எனவும் அழிதருள் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்? எனவும் வரும் திருவாசகத் தொடர்களும்,

  • சுழலார் துயர்வெயிற் சுட்டிடும்போதடித் தொண்டர்

துன்னும் நிழலாவன வென்று நீங்காப்பிறவி நிலைகெடுத்துக் கழலாவினைகள் கழற்றுவ காலவனங் கடந்த அழலார் ஒளியன காண்க ஐயாறு னடித்தலமே? என வரும் திருவிருத்தமும் இங்கு ஒப்பு நோக்கி யுணரத்

தகக ை.

கழல் - வெற்றிக்கு அடையாளமாயணிவது. அழல் சேரும் அங்கியுள் ஆதிப்பிரான் ஆயினும் அவன் திருவடி குளிர்ந்த நிழலேச் செய்வன என்பது ஒர்நயம். சீதப்புன லுண்டுஎரியைக் காலும் சூதப்பொழில் என்பதும் அந் நயம்பற்றி . 'மாசில் வீணே யும்? எனத் தொடங்கும் திருக் குறுந்தொகையும், உராத்துனேத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம்பதி என்னும் சிவஞானபோதமும் ஈண்டு எண்ணத்தகுவன. 138. முடிமன்ன ராகிமூ வுலகம தாள்வர்

அடி மன்னர் இன்பத் தளவில்லே கேட்கில் முடிமன்னராய் நின்றதேவர்கள் ஈசன் குடிமன்னராய்க் குற்றமற்று

நின்ருரே, (1601) திருவடிப் பேறெய்தியோரின் திறமுரைக்கின்றது.

(இ-ள்) இறைவனது திருவடி சிந்தையினும் சென்னி யினும் நிலைபெறக் கொண்டமையால் அடிமன்னர் எனப்