பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 திருமந்திரம்

பெறும் அன்புடையோர் பெறும் இன் பத்தினைக் கேட்க லு:றின் அதற்கோர் அளவு இல்லே . அடி மன்னராய அவர் கள் முடிவேந்தராகி மூவுலகங்களையும் ஆள்வார்கள் . அங்ங்ணம் முடிவேந்தராய் நின்று இம்மை நலங்களைத் துய்த்துத் தேவரானவர்கள், தமது போக நுகர்ச்சி முற்றிய பின்னர் எல்லா வுலகங்களேயும் உடையாளுகிய இறைவன் ஒருவனுக்கே குடிமைத் தொழிலில் நிலைபெற்றவராய் மலக் குற்றம் நீங்கி அம்முதல்வன் அடிக்கீழ் ஒன்றி நிற்பவராவர்

எ-று .

அடி-இறையடி, மன்னர் - (சிந்தையிலும் சென்ன யி லும்) நிலேபெற வைத்தவர்கள் . அடிமன்னர், முடிமன்ன சாகி மூவுலகமது ஆள்வர்; அங்ங்னம் முடிமன்னராய்ப் பின் தேவர்களாய் ஈசன் குடிமன்னராய்க் குற்றம் அற்று நின்ருர் என முடியும். நிற்றல்-பிறந்திறவா நிலேயாகிய பேராவியற்கையை எய்துதல்.

'நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம் ஏமாப்போம் பிணி யறியோம் பணிவோ மல்லோக் இன்பமே எந்நாளும் துன்பமில்லை...... கொய்மலர்ச் சேவடியிணையே குறுகிளுேமே?

எனவரும் திருத்தாண்டகப் பொருள் இதன் விளக்கமாதல்

அறிக. சேவடிக்கணம் சென்னி மன்னித் திகழுமே? என்பது திருவாசகம் சென்னிப்பத்து.

139. வைத்தே னடிகள் மனத்தினுள்ளே நான்

பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்

எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு

மெய்த்தேன் அறிந்தேனவ் வேதத்தின்

அந்தமே. (1602)