பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 திருமந்திரம்

‘எல்லாம் ஆம் எம்பெருமான் கழல்’ என்பது உணர்த்து கின்றது. -

(இ- ள்) தன்னை நினைப்பவரைக் காக்கும் மந்திரமாக நின்றருள்வதும், தீராத நோய்தீர்க்கும் பெரிய மருந்தாகி அருள்வதும், விரிந்த நூற்பொருளாய் நின்று அறி யாமையை யகற்றியருள்வதும், ஈத்துவக்கும் தானப்பய கை நின்று இன்பம் தருவதும், அகத்தும் புறத்தும் அழ கினே நல்குவதும், தூய ஞான நெறியாக நின்று உதவுவ தும் என் தந்தையும் எம் தலைவனும் ஆகிய சிவபெருமா னுடைய இனேயடிகளே எ-று.

இனேயடி - திருவடித்துனே; என்றது இறைவனது ஞானசத்தி கிரியாசத்தியாகிய திருவடிகளே.

மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமைபங்கன் திருவாலவாயான் திருநீறே.

எனவும்,

மருந்து வேண்டில் விவை மந்திரங் கள்ளிவை புரிந்து கேட்கப்படும் புண்ணியங் கள்ளிவை திருந்து தேவன்குடித் தேவதே வெய்திய அருந்தவத் தோர் தொழும் அடிகள் வேடங்களெ . எனவும் ஆளுடைய பிள்ளையாரும்,

‘மந்திரமும் தந்திரமும் மருந்து மாகித்

தீராநோய் தீர்த்தருள வல்லான்?

என ஆளுடைய அரசரும் இத்திருமந்திரப் பொருளேயுளங் கொண்டு கூறிய திறம் நினைத்தற்குரியதாகும்.