பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 திருமந்திரம்

சிவபரம் பொருள் கட்டு நிலையிலும் வீட்டு நிலையிலும் ஆன்மாக்களே விட்டு நீங்காது அவையே தானேயாய் என்றும் ஒட்டிநிற்கும் இயல்பினது என்பார், நீங்காச் சிவானந்த ஞேயம் என்ருர், ஞேயமாகிய பரம்பொருள் இன்பமே யுருவானது என்பார் சிவானந்த ஞேயம்? என்ருர். இன்பமே என்னுடை அன்பே எனப் போற்று வர் மாணிக்கவாசசர், ஞேயம்-உயிர்களால் சிவஞானத் தின் துணைகொண்டு உணர்ந்து பயன்கொள்ளுதற்குரிய பரம் பொருள் ளுேயத்தே நிற்றலாவது, அப்பரம் பொருள் நல்கிய நிறைந்த சிவஞானத்திலே தாம் அடங்கித் தமது அறிவினுள்ளே சிவானந்தமாகிய பேரின்பம் குடிகொள் ளும்படி அம் மெய்ப்பொருளுணர்வில் அழுந்தி ஆனந்த நித்திரை (இன்பத்துயில்) கொள்ளுதல். இதன் இயல்பினே,

ஒங்குணர்வின் உள்ளடங்கி உள்ளத்துள் இன்பொடுங்கத்

தூங்குவர்மற் றுேதுண்டு சொல்? (91 ) எனவரும் திருவருட் பயனில் உமாபதிசிவம் இனிது விளக்கியுள்ளார். வினே ஒழிவுபெற்ற நல்லுயிர்கள் பழைய வாசனைத் தொடர்பால் மலமாயா கன்மங்கள் மேலிடாத படி உயிர்க்குயிராய் நிற்கின்ற திருவருள் ஞானத்தோடும் கூடி ளுேயமாகிய பொருளிற் பிரிவற அழுந்தி நிற்றலாகிய அணேந்தோர் தன்மையினே விளக்குவது இத் திருவருட் பயன் . ஓங்குணர்வு - (உயிர்களேத் தொன்றுதொட்டு மறைத்துள்ள ஆணவ இருள் விட்டு நீங்கத்தக்கதாகப்) பக்குவமுடைய உயிர்களின் உள்ளத்திலே பேரொளியாய் விரிந்து பரவி மேலிட்ட சிவஞானம். அவ்வுணர்வினுள் அடங்கலாவது, ஆன்மா சிவஞானமாகிய அப்பேரறிவுக்கு உள்ளே அடங்கித் தற்போதம் சீவியாமல் நிற்றல். உள்ளத் தின் இன்பு ஒடுங்க சிவன் முத்தராயுள்ள:அவர்கள் தங்கள் உள்ளத்திலே சிவனைத் தியானிக்கும் பொழுது சிவன் அங்கே பதிந்து நிற்றலால் அவர் தம் உள்ளத்திலே பேரின்பம் விளையுமாறு சிவத்தில் அழுந்தி யின்புறுதல்.