பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

209


துரங்குதலாவது, மயக்க விகற்பங்களிற் படாது உறங்காது உறங்குதல்; என்றது, புண்ணிய பாவங்களைப் பயக்கும் விருப்பு வெறுப்புக்களாய்ப் பொருந்தும் கன்மமும் மண் முதல் மாயா தத்துவ மீருய்க் காணப்படும் மாயையும் சுட்டியறிவதாகிய விபரீத வுணர்வைப் பயக்கும் ஆண வ மும் ஆகிய இம் மும்மலங்களும் சிவஞானிக்கு ஆக என்றுணர்ந்து தற்போதம் முளேயாதவாறு நீக்கிச் சிவ ஞானத்துள் அடங்கிச் சிவா நுபவம் சுவா நுபூதிகம், ஆமாறு ஞான நிலையில் உறைத்து நிற்றல். அருளோடு ஒன்றி யுறங்குதலாகிய இதனியல்பினை,

'சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித்

தூங்காதார் மனத்திருளே வாங்காதானை 2 எனவும்,

  • அறியாமை யறிவகற்றி யறிவி னுள்ளே

அறிவுதனை யருளின னறியாதே யறிந்து குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடுங்

கூடாதே வாடாதே குழைந் திருப்பையாகின் 9

(சித்தியார் 382)

எனவும் சான் ருேர் அறிவுறுத்தியுள்ளார்கள்.

எல்லா மலங்களும் பற்றறத் துடைத்து மெய்யுணர்ந்து நிட்டைகூடினர்க்கு உடம்பு நிற்குமளவும் பிராரத்த வினே அவ்வுடம்பைப்பற்றி நின்று அவரை ஒரோவழி வாச இன வயத்தால் வந்து தாக்கும். அதுசார்பாக விருப்பு வெறுப் புக்கள் உளவாம். அவையுள வாக நிலமுதலாகிய பொருள் ஏகதேசப்படும். படவே அவற்றைச் சுட்டியறிவ தாகிய விபரீதவுணர்வு மேற்பட்டு மெய்யுணர்வைக் கீழ்ப்படுத்துப் பிறவிக்கு வித்தாம். இவ்வாறு தாம் நீங்கிய நிலையிலும் மீண்டுபற்றி வருத்தும் வகையில் உயிரை அணுகிப் படர்வன பாசமாம் என்பது தோன்றப்