பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு 21 Í

ஞாதுரு ஞானம் ஞேயம் என்னும் வேற்றுமையற்று ளுேயத்துள் அழுந்தி நிற்றலின் இயல்பினேயும் அதனேச் சிவகுரு தமக்கு அறிவுறுத்திய செய்தியையும் கூறுகின்றது.

(இ - ள்) விழித் திருந்தும் உலகப் பொருள்களைக் காணுத கண்ணும் கேட்காத செவியும் மாறுபடாத போக மும் பிரிந்து கூடாத சேர்க்கையும் உலகத்து நாணல்லாத நாணமும் நாத தத்துவத்தைக் கடந்து விளங்கும் மேலான போதமும் ஆகிய இந் நிலே யைக் கண்டு தெளிவாயாக என என்மு ன் குருவாக எழுந்தருளிவந்து (இவற்றையான் காணுமாறு) காட்டியருளின்ை கண்ணுதல் நந்தியாகிய இறைவன் எ-று.

காணுத கண், கேளாத கேள்வி என்பன தத்தம் உணர்வு நிகழ்தற்குரிய வாயிலாக இருந்தும் உலகப் பொருள்களிற் பற்றுதலின்றிக் காணுங் கரணங்களெல் லாம் பேரின்பமெனப் பேணும் நிலேயில் உயிர் சிவானந் தத்து அழுந்தித் திளேக்குமாறு தத்தம் செயல் மடங்கிய பொறிகளே, விழித்தகண் குருடாய்த் திரிவீரரும் பலரால்? என்பது பெரிய புராணம். கோணுத போகம் என்றது, விருப்பு வெறுப்புக்களால் மனம் மாறுபடாது திருவருளில் ஒன்றி நுகரும் சிவா நுபவமாகிய நுகர்ச்சி. கோணுதல் - மாறுபடுதல் . கூடாத கூட்டம் என்றது, பின் பிரிந்து கூடும் நிலையின்றி எ க்காலத்தும் பிரிவின்றி ஒன்றியிருத்த லாகிய நிலை . நாணுவது செய்யத் தகாதனவற்றின்கண் உள்ளம் ஒடுங்குதல். நாணு த நாணுவது, அவனருளா லல்லது ஒன்றையும் செய்யாது தான் என்னும் உணர்வு ஒடுங்குதல்; தன்பணி நீத்து இறைபணி நிற்றல். நாதாந்த போதம் - நாததத்துவம் முடியவுள்ள முப்பத் தாறினேயும் கடந்து அதன்மேலாக விளங்கும் சிவஞானம். காணுய் - கண்டறியமாட்டாதாய், காண்பாயாக. காட்டி