பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛篮2 திருமந்திரம்

னன் உபதேசித்துப் பொருளுண்மையினை யான் காண உடனிருந்து காட்டியருளினன். நந்தி - சிவபெருமான்.

து ற் வ;

அஃதாவது புறமாகிய செல்வத்தின் கண்ணும் அக மாகிய உடம்பின் கண்ணும் உளதாம் பற்றினை விட்டொழித் தல். என்றும் மாருதுள்ளதாகிய ஞேயப் பொருளில் அழுந்துவார்க்கு யான் எனது என்னும் இப்பற்றுக்கள் தடையாம் என்னும் உணர்வு தோன்றுதல் இயல்பாதலின் அவற்றைத் துறத்தலாகிய துறவு இங்குக் கூறப்படுகிறது.

143. இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்

துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானே

மறப்பிலராய் நித்தம் வாய்மொழி வார்கட்

கறப்பதி காட்டும் அமரர் பிரானே, (1614) துறவு நெறியைக் கடைப்பிடித்தற்கு இன்றியமையாத இறையுணர்வாகிய திருவருள் ஞானம் பெறுமாறு உணர்த்துகின்றது.

(இ-ள்) இறத்தலும் பிறத்தலும் ஆகிய துன்ப இன் பக்

கூறுபாடுகள் இரண்டினேயும் நீங்கி, யான் எனது என்னும் இருவகைப் பற்றினேயும் விட்டொழித்தற்குக் காரண மாகிய தவநெறியினை வகுத்தருளிய ஒளியுருவினகிைய இறைவனே (எக்காலத்தும்) மறவாதவர்களாய் நாள் தோறும் வாயாற் புகழ்ந்து போற்றுவார்க்கு வானேர் பெருமானுகிய அம் முதல்வன் அன்னுேர்தம் இருவகைப் பற்றுகளும் அற்ருெழியுமாறு சிவஞானத்தினைக் காட்டி யருள்புரிவன் எ-று.

ஈண்டு இருமை என்றது, இறத்தல் பிறத்தல் ஆகிய வற்ருல் உயிர்கட் குளவாம் துன்ப இன்பக் கூறுபாடுகளா