பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 திருமந்திரம்

கொள்வதும் உண்டு. பதி என்பதற்கு நெறி என்ற பொரு ளும் இருத்தலால் அறப்பதி காட்டும்’ என்பதற்கு அற நெறியாகிய துறவு நெறியைக் காட்டியருள்வன் எனப் பொருள் உரைத்தற்கும் இடனுண்டு. அறம் என்றது ஈண்டுத் துறவறத்தைக் குறித்தது; இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் எனவரும் திருக்குறளில் அறம் என்ற சொல் துறவறத்தினைச் சிறப்பாக உணர்த்தி நிற்றல் காணலாம். அமரர்.பிரான்-தேவதேவன்; சிவ பெருமான். துறவற த்தின் நிற்பார்க்கு இறைவனது அருளின் துணை வேண்டும் என்பது அருந்துணையை’ என்னும் திருத்தாண்டகத்தாற் புலளும் .

143. பிறந்தும் இறந்தும் பல்பேதைமை யாலே

மறந்து மலவிருள் நீங்க மறைந்து சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத் துறந்த வுயிர்க்குச் சுடரொளியாமே. (1615) கட்டுநிலையில் உள்ளார்க்கு மறைந்து நின்ற சிவன், அருள் சேர் பக்குவ நிலையில் துறந்தவுயிர்க்குச் சுடரொளியாய் வெளிப்பட்டுத் தோன்றுமாறு உணர்த்துகின்றது.

(இ - ள்) உயிர்கள் இருள் மலமாகிய ஆணவத்துட்பட்டு அதன் பல்வேறு சத்திகளாகிய பேதைமை காரணமாகப் பலவகைப் பிறவிகளிற் பிறந்தும் இறந்தும் (இங்ங்னம் பிறந்திறந்துழலும் திறங்களே அறவே) மறந்தும் வருகின்ற கட்டு நிலைக்கண் இருள் மலம் அவ்வுயிர்களே லிட்டு நீங்குதல் வேண்டி மறைந்து நின்று சிறந்த உதவியைச் செய்தருளிய சிவபெருமான், இருவினையொப்பு மலபரி பாகம் பொருந்தித் தனது திருவருளேப் பெறுதற்குரிய காலத்துத் திருவருட் பதிவு பெற்றுத் துறவுநிலையை யடைந்த நல்லுயிர்க்கு அவர்தம் உள்ளத்தே பேரொளிப் பிழம்பாக வெளிப்பட்டுத் தோன்றியருளுவன் எ-று.