பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

215


(மலவிருளின் காரியமாகிய) பல்பேதைமையாலே பிறந்தும் இறந்தும் மறந்தும் (வரும் உயிர்க்கு) மலவிருள் நீங்க மறைந்து சிறந்த சிவன், அருள் சேர் பருவத்துத் துறந்தவுயிர்க்குச் சுடரொளியாம் என இயைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும். பிறப்பிற்கும் இறப்பிற் கும் மறப்பிற்கும் காரணமாவது, நில்லாதவற்றை நிலையின வென்றுணரும் பேதைமையே என்பார் பல்பேதைமை யாலே பிறந்தும் இறந்தும் மறந்தும்’ என்ருர். இங்ங்னம் பிறந்திறந்து மறந்துழலும் கட்டு நிலையிலும் சிவபெரு மான் உயிர்க்குயிராய் மறைந்து நின்று அவ்வுயிர்களின் மலவிருள் நீங்குமாறு சிறந்த உதவியைச் செய்கின்றன் என்பார் மலவிருள் நீங்க மறைந்து சிறந்த சிவன்? என் ருர். இங்ங்னம் மறைந்து நின்ற இறைவன் உயிர்கள் சத்தினி பாதமாகிய திருவருட்பதிவினைப் பெறும் பக்கு வத்தில் துறவுநிலைபெற்ற உயிர்களுக்குச் சோதிப்பொரு ளாக வெளிப்பட்டருள் வன் என்பார், சிவன் அருள் சேர் பருவத்துச் சுடரொளியாம்? என்ருர். இத்திருமந்திரம்,

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்ப தறிவு ? (858) எனவரும் திருக்குறளுக்குத் திருமூலர் அருளிய விளக்க வுரைபோன்று அமைந்துள்ளமை உய்த்துணர்ந்து மகிழத் தகுவதாகும். உயிர்க்குயிராய்ச் சிறந்து நின்று உதவி செய்தல்பற்றிச் சிறந்த சிவன் என்ருர் . சிறந்தது பயிற் றல் என்பது தொல்காப்பியம் என்னிலும் இனியான் ஒருவன் உளன்’ என்பது அப்பர் அநுபவ மொழி.

145 அறவன் பிறப்பிலி யாரு மிலா தான்

உறைவது காட்டகம் உண்பது பிச்சை துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப் பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே (1616)