பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

217


(இ-ள்) நெருஞ்சிலேப் படைத்தவனே அதனின்றும் விலகி நடத்தற்குரிய வழியையும் அமைத்துள்ளான். அவ் வழியினின்று வழுவி நடந்தால் நெருஞ்சிலின் முள்குத்தும். நன்கு அமைக்கப்பட்ட வழியிலிருந்து சிறிதும் வழுவாது நடக்க வல்லார்க்கு அவ்வழியில் நெருஞ்சில் முள் குத்த மாட்டா எ-று .

தோற்றத்திற்கினிய பூவினேயும் அதுவே காய்த்து முதிர்ந்த நிலேயில் முள்ளாகி வருத்தும் விதையினையும் உடையது நெருஞ்சி. இங்கு நெருஞ்சி என்றது அன்பிளுல் தோற்றப் பொலிவுடையதாய் மக்கள் சுற்றம் என்னும் பிணிப்பினுல் துன்பம் விளேப்பதாய் அமைந்த உலக வாழ்க்கையினை. உயிர்கள் இன்ப அன்பினே வளர்த்தல் வேண்டி இவ்வுலக வாழ் வினே அமைத்த இறைவனே இவ் வாழ்க்கை துன்பமுடைய தாய் மாறிய நிலையில் இதனேவிட்டு நீங்குதற்குரிய நெறியாகத் துறவு நெறியினே யும் வகுத்தருளினன் என்பார், நெருஞ்சில் படைத்தான் நெறியைப் படைத்தான்’ என்ருர் . வாழ்க்கை துயர மாதல் அறிந்தவர் அதனே விடுத்துத் துறவற நெறியில் வழு வாது இயங்கவல்லராயின் அவரை உலக வாழ்க்கையி லுள வாய துன்பங்கள் தொடரமாட்டா என்பார் நெறியின் வழுவாது இயங்க வல்லார்க்கு நெறியின் நெருஞ்சில் முள் பாயகில்லாவே' என்ருர், துறவு நெறியில் வழுவின் மீளவும் துன்பத்திற் குள்ளாவர் என் பார் நெறியின் வழு வின் நெருஞ்சின்முட் பாயும்’ என்ருர். பாய்தல்-அழுந் திப் பதிதல். இது ஒட்டென்னும் அணியின் பாற்படும்.

'புன்புலத் தமன்ற சிறியிலே நெருஞ்சிக் கட்கின் புது மலர் முட்பயந் தாஅங்கு இனியசெய்த நங் காதலர் இன்னுசெய்தல் நோமென் னெஞ்சே,

(குறுந்தொகை-202) என்பர் அள்ளுர் நன்முல்லேயார் .