பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 திருமந்திரம்

இறைவன் திருவருள் கிடைத்தால் எல்லா நலங்களும் எளிதிற் கிடைக்கும் என்கின்றது. -

(இ - ள்) உயிர்க்குயிராய சிவபெருமானது திருவருள் உண்டாயின் என்றும் அழிவில்லாத நல்ல செல்வம் உள வாகும். என்றும் அழிவில்லாத அம் முதல்வன் அருள் பெறில் நல்ல சிவஞானம் உண்டாகும். அம்முதல்வன் அருளால் உயிர்க்கு எண்பெருங் குணங்களாகிய பெருந் தன்மையும் உண்டாகும். இறைவன் திருவருளால் பெருந் தெய்வமாகிய சிவமாந்தன்மைப் பெருவாழ்வும் உண்டா கும் எ-று.

நற்செல்வம் - கெடுதலும் ஆதலுமில்லாத நல்ல செல் வம். நன்ஞானம் - குறையாத பேரறிவாகிய சிவஞானம் , பெருந்தன்மை - பெருங்குணம்; என்றது இறைவனுக்குரிய எண்குணங்களே. பெருந்தெய்வம் - அடியார் தொடரும் பெருந்தெய்வமாகிய சிவம்; என்றது சிவமாந்தன்மைப் பெருவாழ்வாகிய வீடுபேற்றினே.

  • அருளே யுலகெலாம் ஆள்விப்ப தீசன்

அருளே பிறப்புறுப்ப தாகுல்-அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளு மாவ தெனக்கு?

எனவரும் அம்மையார் திருவந்தாதி இத் திருமந்திரப் பொருளுடன் ஒத்தமைந்திருத்தல் காணலாம்.

அவவேடம்

மேற்கொண்டார்க்குப் பயன்தராது பழிவிளேக்கும் போலி வேடத்தினை இகழ்ந்துரைக்கும் பகுதி.