பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

221


149. ஆடம்பரங் கொண் டடிசி லுண்பான்பயன்

வேடங்கள் கொண்டு வெருட்டிடும்

பேதைகாள் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியுங் காணிர் சிவனவன்

தாள்களே. (1655)

போலி வேடத்தாரை நோக்கி இடித்துரைக்கின்றது.

(இ-ள்) உழைப்பின்றிச் சோற்றி&னயுண்டு வயிற்றை நிரப்புதல் வேண்டி வெளித்தோற்ற உயர்வினையுடைய ராய்த் தவவேடங்களே மேற்கொண்டு உலகிற் பொது மக்களே மயக்கி அச்சுறுத்தித் திரியும் பேதைகளே! (பயனற்ற இவ்வேடத்தால் நுமக்கு எத்தகைய நற்பேறு மில்லே. நீவிர் உண்மையான தவத்தின் பயன்பெறக் கருது வீராயின் இப்பொய்ம்மை நிலேயை விட்டு) அன்பு மேலீட்டால் இறைவன் திருவருளே வியந்து மகிழ்ச்சி மீதுார ஆடியும், அவனது புகழ்த்திறங்களைப் பாடியும், அவனே இதுகாறும் அடையப்பெருத இடையீட்டினே யெண்ணி வருந்தி அழுதும் அரற்றியும், சிவன் எவ்விடத் தான் என அகத்தும் புறத்தும் தேடியும் சிவபெருமாளுகிய அம் முதல்வன் திருவடிகளைத் தியானித்துக் காண்பிராக.

எ-று .

ஆடம்பரம்-உலகத்தார் தன்னை யுயர்வாக மதித்தல் வேண்டும் என்னும் நோக்குடன் தம்மைப் புறத்தே தோற்றப் பொலிவினராக அணிசெய்து கொள்ளுதல். வானுயர் தோற்றம்’ என்ருர் திருவள்ளுவர். அடிசில்சோறு; உணவு. உண்பான்-உண்ணும் பொருட்டு. பயன் வேடங்கள்-நற்பயனை விளேத்தற்குரிய தவவேடங்கள்; என்றது பல சமயத்தாரும் மேற்கொள்ளும் பலவகைத் தவ வேடங்களே, வேடங்கள் கொண்டு எனவே புறத்தே