பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7



எனவரும் பா ட லி ல் திருமூலநாயனார் வரலாற்றினை வகைப்படுத்து உணர்த்தியுள்ளார். “நற்குடிகள் நிலை பெற்றுவாழும் சாத்தனூரிலே பசுக் கூட்டத்தை மேய்ப்பானாகிய இடையனது உடம்பிற் புகுந்து சென்னியிலே நிலைபெற்ற வளைந்த பிறைச் சந்திரனையணிந்த சிவபெருமானை முழுமை வாய்ந்த தமிழிற் கூறிய வண்ணமே நிலைத்த வேதங்கள் சொல்லியபடியே பரவிப்போற்றி எனது சென்னியிலே தன் திருவடியினை நிலைபெறச் செய்தருளிய பெரியோன் திருமூலன் என்னும் பெயரையுடைய அருளாளன் ஆவன்” என்பது இத்திருவந்தாதியின் பொருளாகும். எனவே திருமூல நாயனார் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் நிரம்பப் பெற்ற தமிழ் மறைகளையும் வடமொழி வேதங்களையும் தழுவித் தமிழாகமம் ஆகிய இத் திருமந்திர மாலையை அருளிச் செய்தார் என்பது புலனாம்.