பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 திருமந்திரம்

வழங்கிய திறம் அறிந்து மகிழ்தற்குரியதாம். அவம் மிக்க வர் - கூடாவொழுக்கத்தில் தழும்பேறிய பொய்ம்மையாள ராகிய போலித்தவசிகள். அவம் மிக்கவர் அவ்வேடத்து ஆகார் - பொய்ம்மையொழுக்கத்தின் மிக்கவராகிய அவர் கள் அத்தகைய வேடத்திற்கு உரியரா கார். தவமிக்க வர்க்கு அன்றி - தவம் மிக்கவராலன்றி ஏனையோரால். தாங்கவொண்ணுது - மேற்கொண்டு தாங்குதற்குரிய எளிமையதன்று. முன்னத் தவப்பயிற்சியுடையராய் நல்லொழுக்கம் வாய்ந்தவர்களே தவவேடத்தினைக் கடைசி வரை நெகிழவிடாது தாங்கும் மனத்திண்மையுடையர். ஏனேயோர் அன்னரல்லராதலின் அன்னேர் தவவேடத் தினை மேற்கொள்ளுதல் பயனற்றது என்பதாம். இத்திரு மந்திரத்தின் பின்னிரண்டடிகளும்,

‘தவமுந் தவமுடையார்க் காகும்; அவமதனை

அஃதிலார் மேற்கொள்வது ? (262)

எனவரும் திருக்குறளே அடியொற்றியமைந்தன. (அகத் தின் பயிற்சியாகிய தவவொழுக்கமேயன்றிப்) புறத் தோற்றமாகிய தவவேடமும் முன்னத் தவமுடையார்க்கே எளிதின் மேற்கொள்ளத் தகுவதாகும். அத்தவப் பயிற்சி யில்லாதார் தவவேடமாகிய அதனை மேற்கொள்வது பய னில்லாத செயலாம்? என்பது இதன்பொருள்.

திருநீறு

151. கங்காளன் பூசுங் கவசத் திரு நீற்றை

மங்காமற் பூசி மகிழ்வரே யாமா கில் தங்கா வினேகளுஞ் சாருஞ் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே, (1666) திருநீற்றின் சிறப்பும் அதனை யணிவோர் பெறும் பயனும் கூறுகின்றது.