பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

229


அரனுக்கு அடிமையாதற்கு அவனருள் இன்றியமை யாததென்பார் அருளால் அரனுக்கு அடிமையதாகி’ என்ருர், அவனருளாலே அவன்தாள் வணங்கி என்பது திருவாசகம். பொருள் - செம்பொருளெனப்படும் சிவம், ஆதல் - தோன்றி வி ள ங் கு த ல். த ன து உடலிற் பொற்பதி என ஏழாமுருபு விரிக்க. பொற்பதி என்றது, உயிர்களது நெஞ்சத் தாமரையாகிய அழகிய ஊரினே . 'சீரார்பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான் உவந்து’ என்பது திருவாதவூரடிகள் அருளிய அநுபவ மெய்யுரை. நாடுதல் என்றது, காணப்பட்ட உடம்பினேக் கொண்டு அதனுள்ளே அருவாயுள்ள உயிரை யும் உயிர்க்குயிராகிய பரம்பொருளையும் ஆராய்ந்து காணுதல். ‘அருந்துயர்க் கு ரம்பையின் ஆன்மா நாடி’ என்பது சிவ ஞானபோதப் பாயிரம். இருள்-கருதியுணரப் படும் இருளாகிய ஆணவமலம். பெரும் பெயர்க் கடவுளிற் கண்டு கண்ணிருள் தீர்ந்து என்பது சிவஞான போதப் பாயிரம். இருஞ்செயல்-செய்தாரை நிழல்போற் பிரியாது நின்று வருத்தும் வல்வினை. செயலறுதல் - வினேத் தொடர்பு அறுதல். தெருள்-தெளிவு; என்றது எல்லாப் பொருளையும் படைக்க வல்லவன் எல்லா வுலகங்களையும் தனது உடைமையாகக் கொண்ட இறைவன் ஒருவனே என்னும் உணர்வும் அப்பொருள்களில் அன்புசெய்யும் உணர்வுடையராய உயிர்கள் இறைவனுக்கு அடிமைப் பொருளாவர் என்னும் அறிவும் பெற்றுத் தம்மையும் தலைவனையும் உள்ளவாறுணரும் தெளிந்த ஞானத்தின. இத்தகைய சிவஞானச் செல்வர்கள் தம்மை ஒரு பொரு ளாக மதிக்காது ஊனமொன்றில்லா ஒருவனுக்கே ஆட்