பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 திருமந்திரம்

பட்டு இருப்போந் திருவடிக் கீழ் நாம்? என்னும் தெளிந்த சிந்தையராய்ச் செம்மாந்து வாழுந் திறத்தினராய்,

"மெய்தான ரும்பி விதிர் விதிர்த்துன் விரையார் கழற்கென்

கைதான் தலைவைத்துக் கண்ணிர்ததும்பி

வெதும்பியுள்ளம்

பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றிசயசய

போற்றியென்னுங்

கைதா,னெகிழவிடேனுடையா யென்னைக் கண்டுகொள்ளே’

எனத் தமது அன்பின் திறம் மேற்பட்டுத் தோன்றக் கண்டார்க்குச்சிவனது திருவுருவினை நினைப்பிக்கும் நிலேயில் நடமாடுங் கோயில் நம்பராக உலகிற் சஞ்சரிப்பர் என் பார், தெருளாம் அடிமைச் சிவவேடத்தார்’ என அருளினர்.

அபக்குவன்

பக்குவம்-உயிர்களைப்பற்றிய மும்மலப்பிணிப்பு சரியை முதலியவற்ருல் கழலுதற்குரிய நிலை, அந்நிலேயினைப் பெருத உயிர் அபக்குவன். அபக்குவம்-மலங் கழலும் நெகிழ்ச்சியைப் பெருமை.

154, குருட்டினே நீக்குங் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடி குருடுங் குருடுங் குழிவிழு மாறே. (1680)

மலங்கழலு தற்குரிய நல்லாசிரியனே யடையாத அபக்குவி களின் அவலநிலையினைக் கூறுகின்றது.

(இ-ள்) உயிரின் அறிவா கிய கண்ணை மறைத்துள்ள இருட் படலமாகிய குருட்டுத் தன்மையினை நீக்கவல்ல