பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 திருமந்திரம்

155. சத்தும் அசத்தும் எவ்வாறெனத்

தானுன்னிச்

சித்தை யுருக்கிச் சிவனருள் கைகாட்டப் பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச்

சத்தியில் இச்சைத் தகுவோன்

சற்சீடனே. (1697)

பக்குவனுகிய நன்மாணுக்கனது இயல்புணர்த்துகின்றது.

(இ-ள்) என்றும் மாருதுள்ள மெய்ப்பொருளும் ஒரு நிலையில் நில்லாது மாற்றமடையும் பொய்ப் பொருள்களும் எத்தன்மையன எனச் சிந்தித்துணர்ந்து, சித்தத்தை யுருகச் செய்து, சிவபெருமானது திருவருள் உய்யும் நெறியிதுவெனக் காட்டித் துணைசெய்ய, அம் முதல்வன் கைம்மாறு கருதாது செய்துவரும் உபகாரத்தை மறவாது கடைப்பிடித்துச் செய்யும் பேரன்பினலே அதன் பயணுகிய சிவஞானம் கைவரப் பெறுதல் வேண்டி அம் முதல்வனே ப் பணிந்து பேரானந்தத்தை வழங்கும் அம் முதல்வனது திருவருளிற் படிதற்குப் பெருவிருப்புடையோன் பரிபாக முடைய நல்ல மாணக்கவைன் எ-று.

சத்து-சுட்டுணர்வால் அறியப்படாது சிவஞான மொன் றினலே அறிதற்குரியதாய் என்றும் மாருதுள்ளதாகிய சிவம், அசத்து-சுட்டி யறியப்படுவதாய் அழியுந் தன்மைய தாகிய பிரபஞ்சம். சித்து-சித்தம்; சித்தம் அம்முக்கெட்டுச் சித்து என உகரவீருய்த் திரிந்தது . சத்து அசத்து எ ன்ப வற்றின் இயல்பினே,

உணருரு வசத்தெனின் உணரா தின்மையின்

இருதிற னல்லது சிவசத்தா மென இரண்டு வகையின் இசைக்கு மன்னுலகே’’