பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£40 திருமந்திரம்

நிலேபற்றி வடிவு சதாசிவம் என்ருர். அண்டத்திற் போன்று பிண்டமாகிய உடம்பிலும் இறைவன் திருக்கூத்து நிகழ்த லின் வடிவு திருக்கூத்தே' என்ருர் .

சதாசிவலிங்கம்

இறைவன் அருவுருவத் திருமேனியாகிய சதாசிவ மூர்த்தியாய் நின்று அருளும் முறையினை உணர்த்து கின்றது .

159. அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள

அஞ்சினே டஞ்சு கரதலந் தானுள அஞ் சுட னஞ்சா யுதமுள நம்பியென் நெஞ்சு புகுந்து நிறைந்து

நின்ருனே. (1786)

சதாசிவ மூர்த்தியின் திருமேனியைச் சிவலிங்கவுருவில் உளங்கொண்டு போற்றுமாறுணர்த்துகின்றது .

(இ-ள்) இறைவனுக்கு ஈசானம் தற்புருடம் அகோரம் வாமதேவம் சத்தியோ சாதம் என ஐந்து திருமுகங்கள் உள்ளன. (ஒவ்வொரு முகத்திலும் மும்மூன்று கண்களாக) பதினேந்து கண்கள் உள்ளன. பத்துக்கைகள் உள்ளன. அப்பத்துக் கைகளிலும் பத்து வகைப்படைகள் உள்ளன. (இத்தகைய திருவுருவத்தினையுடைய) யாவரும் விரும்பத் தக்க சதாசிவமூர்த்தியாகிய பெருமான் என் நெஞ்சத்துட் புகுந்து எங்குமாய் நிறைந்து நிற்கின்றன் எ. று.

ஐம்மூன்று-பதினேந்து அஞ்சினேடு அஞ்சு-பத்து. கரதலம்- கை. ஆயுதம் படைக்கலம்.

ஆத்ம லிங்கம்

அருள் நிலைபெற்ற ஆன்மாவே சி வ லிங் க ம ப த லே யுணர்த்துவது.