பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

243


ஆதி-முதல். பரந்தெய்வம் என்பதல்ை இறைவனது வேரும் நிலையும், அண்டத்து நற்றெய்வம் என்பதல்ை ஒன்ரும் நிலையும், சோதி என்ற தல்ை உயிர்க்குயிராய் உடனும் நிலேயும் சுட்டப்பட்டமை யுணரலாம். சோதியே சுடரே சூழொளி விளக்கே? எ ன் ப து திருவாசகம்.

சிவலிங்கம்

எல்லாமா ய் விளங்கும் பரசிவத்தை ஒரு குறியின் இடமாக எழுந்தருளச் செய்து வணங்கும் முறையை உணர்த்துகின்றது.

162. மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்

பல ந்தரும் ஜம்முகன் பரவிந்து நாதம் நலந்தருஞ் சத்தி சிவன் வடிவாகிப் பல ந்தரு லிங்கம் பராநந்தி யாமே. (1776) சிவலிங்கத் திருமேனியே நவந்தரு பேதமாகி அவரவர் பக்குவ நிலேக்கேற்ப நற்பயன் தந்தருளும் என்பது உணர்த்துகின்றது.

(இ.ஸ்) தாமரை மலரிடத்தே தோன்றிய பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், ஞான வன்மையினே அருளும் ஐந்து திருமுகங்களேயுடைய சதாசிவன், மேலான விந்து, நாதம், நலத்தினேயருளும் சத்தி, சிவன் எனத் திருமேனியாகி உயிர்கட்கு முத்திப்பயனை நல்கும் இலிங்கத் திருமேனி பராசத்தியுடன் பிரிவின்றியுள்ள சிவபெருமானது திருவுருவமாகும் எ-று.

மலர்ந்த-மலரிடத்தே தோன்றிய . அயன்.பிரமன். மால்-விஷ்ணு, பலம்தரும்-ஞானமாகிய வன்மையினே