பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 திருமந்திரம்

163. உடல் பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு

படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து

நொடியின் அடிவைத்து நுண்ணுணர்

வாக்கிக் கடியப் பிறப்பறக் காட்டினன்

நந்தியே. (1778)

குரு சாம்பவ தீக்கை செய்து உபதேசித்தருளும் திறத்தை உணர்த்துகின்றது.

(இ-ள்) நந்தியாகிய சிவபெருமான், பக்குவமுடைய மாணவனது படர்ந்த வினேத்தொடர்பு அற்று நீங்கும்படி அவனே அருட் கண்ணுல் நோக்கி அவன் தலைமேல் தனது கையை வைத்து, விரைவில் தனது திருவடியை அவன் முடிமேற் சூட்டி, நுண்ணுணர்வாகிய சிவஞானுேபதேசஞ் செய்தருளி, அவனுடைய உடல் பொருள் உயிர்iஅனைத்தை யும் அவன் வார்த்த நீருடன் தன்னுடைமையாக ஏற்றுக் கொண்டு, விரைந்து வரும் வெள்ளம் போல் தொடர்ந்து வரும் பிறவியற்ருெழியும் நன்னெறியினேக்காட்டியருளினன்

எ-று .

நந்தி, பார்த்துக் கைவைத்து அடிவைத்து நுண் ணுணர்வாக்கி, உடல் பொருளாவி உதகத்தா ற்கொண்டு பிறப்பு அறக் காட்டினன் என முடிக்க. நந்தி-சிவ பெருமான். பார்த்தல். சகூடி தீக்ஷ . அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய் கண்ணுல் நோக்கிக் கண்ணப்பர் பணி கொள்ளும் கபாலியாரே எனவரும் திருமுறைத் தொடர்கள் திருக்கண் நோக்கமாகிய இத் தீக்கையினைக் குறித்தமை காணலாம். கைவைத்தலும் முடிமேல் அடிவைத்தலும் பரிச தீக்கையாகும். நுண்ணு ணர்வாக்கி எனவே அவ்வுணர்வினைத் தோற்றுவித்தற்குக்