பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

247


காரணமாகிய மானச தீக்கையின் வழிப்பட்ட வாசக தீக்கையும் செய்தருளின மை புலனும்.

யான் என தென்னும் செருக்கறுதற் பொருட்டு மான வன் தன்னுடைய உடல் பொருள் ஆவியனேத்தையும் ஆசிரியனுக்கு நீர்வார்த்துக் கொடுக்க ஆசிரியன் அவை யனேத்தையும் தன்னுடைமையாக ஏற்றருளும் சம்பிர தாயத்தினை ,

'அன்றே யென்றன் ஆவியும் உடலும் உடைமை யெல்லாமும்

குன்றே யனையாய் என்னை யாட்

கொண்டபோதே கொண்டிலையோ?

என வரும் திருவாசகத்தால் நன்குணரலாம்.

திருவருள் வைப்பு குருவின் அறிவுரையின் வழிநின்று முன்னேயோரது ஒழுக்கநெறியினைப் பின்பற்றி யொழுகுவார்க்கு இறைவன் திருவருளே ஆதாரமும், ஆதேயமுமாக வைக்கப்பெற்ற திறத்தையுணர்த்துவது. 164. அருளிற் பிறந்திட் டருளில் வளர்ந்திட் டருளில் அழிந்திளேப் பாறி மறைந்திட் டருளான ஆனந்தத் தாரமு துாட்டி அருளாலென் னந்தி யகம்

புகுந்தானே. (1800) இறைவன் உயிர்கள் பொருட்டு நிகழ்த்தும் ஐந்தொழில் களும் அம் முதல்வன் உயிர்கள்பால் கொண்ட திருவருளே நிலை க்களமாகக் கொண்டே நிகழ்வன வென்பது உணர்த்துகின்றது.

(இ-ள்) உயிராகிய யான் அருளின் உதவியாற் பிறந்து அதன் துணையால் வளர்ந்து கன்மத்தால் பிறந்தும் இறந் தும் அலேப்புண்ட அயர்வு நீங்க அருளால் ஒடுங்கி இளைப்