பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

249


என உமாபதி சிவம் விரித்து விளக்கியுள்ளார். கன் மத்தி ல்ை அலைப்புண்ணும் உயிர்களே இளைப்பாற்றுதலே அழித்தல். நீங்காதுள்ளமலம் நீங்குதற் பொருட்டு மீளவும் தனுகரணபுவன போகங்களோடு கூட்டுதலே படைத்தல். கன்மங்களே நுகர்ந்து மலம் நீங்குதற்குரிய பக்குவம் உண் டாக்குதலே காத்தல். அந்தப் போகங்களைப் புசிப்பித்துக் கன்மங்களைத் தொலைப்பித்தற்காகக் குறிப்பிட்ட காலஅளவு களிலே அவற்றில் நிறுத்துதலே மறைப்பு. உயிர்களைத் திருவடியிலே கூட்டிக்கொள்ளுதலே அருள்.

போற்றி யெல்லா வுயிர்க்குந் தோற்றமாம் பொற் பாதம், போற்றி யெல்லா வுயிர்க்கும் போகமாம் பூங்கழல் கள், போற்றி யெல்லாவுயிர்க்கும் ஈரும் இணே யடிகள், போற்றிமால் நான்முகனுங் காணுத புண்டரிகம், போற்றி யாமுய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் ?? எனத் திருவாசகத்தில் இறைவன் செய்யும் ஐந்தொழில்களும் குறிக்கப்பெற்றுள்ள தென்பதனே மதுரைச் சிவப்பிரகாசர் மேற்காட்டிய சிவப்பிரகாச வுரையில் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். அருளால் என் நந்தி யகம்புகுந் தானே? என்பதனை என்மனமே யொன்றிப் புக்கனன் போந்த சுவடில்லேயே’ என்ற தொடரில் அப்பரடிகள் குறித் துள்ள மை அறியத்தகுவதாகும்.

165, பிறவா நெறிதந்த பேரரு ளாளன்

மறவா அருள் தந்த மாதவன் நந்தி அறவாழி யந்தணன் ஆதி பராபரன்

உறவாகி வந்தென் உளம்

புகுந்தானே. (1803)

அறவாழி யத்தணகிைய இறைவன் உயிர்க்கு அருள்புரி யும் திறங்கூறுகின்றது.