பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 திருமந்திரம்

(இ-ள்) அறக்கடலாகிய அருளாளனும் ஆதியாகிய பராசத்தியுடன் பிரிவின்றியுள்ள அம்மையப்பனுமாகிய சிவபெருமான் எமக்கு மீட்டும் பிறவா நெறியினைத்தந்த பேரருளாளனும் தன்னை என்றும் மறவாமைக்கு ஏது வாகிய அருள்ஞானத்தை வழங்கிய பெருந்தவமுடைய குருவும் என இவ்வாறு பல்லாற்ருனும் எனக்கு உறவின கிை வந்து உயிர்க்குயிராய் என்னுள்ளத்தே குடிகொண் டருளினன் எ-று.

பிறவாநெறி-பிறவாமைக்கு ஏதுவாகிய நன்னெறி, மறவா அருள்-மறவாமல் இடைவிடாது நினைத்தற்கு இன்றியமையாத அன்பினைத்தரும் அருள் ஞானம். பிறவா நெறி தந்த அறவாழி யந்தணன், ஆதிபராபா ன் என்ற தொடர்கள் அறவாழியந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்தலரிது’ என்னுந் திருக்குறளேயும், ஆதி பகவன் முதற்றேயுலகு என்னுந் திருக்குறள் தொடரை யும் நினைப்பித்தல் காண்க. இங்ங்னம் உறவாகிவருதற்கு அவனை மறவா அருளாகிய திருவடிஞானமே காரணமென் பதனே, உறவுகோல் நட் டுணர்வு கயிற்றில்ை முறுக வாங்கிக் கடையமுன்னிற்குமே? அப்பன் நீ அம்மை நீ: 'ஈன்ருளுமாய் எனவரும் அப்பாருள் மொழிகள் நன்கு

புலப்படுத்துவனவாம்.

அருளொளி

சிவபரம்பொருள் தன்னிற் பிரிவில்லாத பராசத்தியின் சொரூபமாகிய அருளொளியாய்த் தோன்றி ஞாயிறு திங்கள் முதலிய புறப்பொருள்களிலும் உயிர்களின் அகத்