பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு £5.3

சிவபூசை

பூ, புகை, விளக்கு, திருமஞ்சனம், திருவமுது முதலி யன கொண்டு, பூதசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி என்னும் ஐந்துசுத்திசெய்து ஆசனமிட்டு மூர்த்தியை எழுந்தருளச் செய்து மூர்த்தி மானுகிய பரஞ்சோதியைப் பாவனே செய்து அதன்கண் ஆவாகித்து மெய்யன்புடன் அருச்சனை செய்து விருப்புடன் சிவ வேள்வியினைச் செய்து முடித்தல். இதன் இயல்பினே,

வாசத்திருமஞ்சனம் பள்ளித்தாமம் சாந்தம் மணித்துாபம் தேசிற்பெருகுஞ் செழுந்தீபம் முதலாயினவும் திருஅமுதும் ஈசர்க்கேற்ற பரிசினல் அருச்சித்தருள எந்நாளும் பூசைக்கமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார்சிலம்பின்

ஒலிஅளித்தார். (24)

எனச் சேக்கிழார் சுவாமிகள் கழறிற்றறிவார் நாயனுர் புராணத்து விளக்கியுள்ளார். இப்பூசை புறப்பூசை (கிரியை) அகப்பூசை (ஞானம்) என இருவகைப்படும். பூசைத்திரவியங்களே வெளியிற் சேர்த்துக்கொண்டு இறை வன வழிபடுதல் புறப்பூசை. இவற்றை மனத்தாலே படைத்துக்கொண்டு வழிபடுதல் அகப்பூசை யாகும்.

167. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்

வள்ளற் பிரானுர்க்கு வாய்கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன்

சிவலிங்கம் கள்ளப் புலனேந்துங் காளா

மணிவிளக்கே (1828) அகப்பூசைக்குரிய அங்கங்கள் ஆமாறு உணர்த்துகின்றது.