பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு 357

169. கானுறு கோடி கடிகமழ் சந்தனம்

வானுறு மாமல ரிட்டு வணங்கினும் ஊனினே நீக்கி யுணர்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேர

வொண்ணுதே. (1848)

குருபூசையின் சிறப்புணர்த்துகின்றது.

(இ-ள்) காட்டில் பொருந்திய கோடியோசனை தூரம் மணம் கமழும் சந்தனத்தையும் வானளாவும் மணம் வீசும் நறுமலர்களேயும் இட்டு இறைவனேப் பூசித்தாலும் (தன் போல் மானுடச் சட்டை சாத்திவந்த) குருவினை அவர் கொண்ட ஊனுடம்பின் வேருக நீக்கிச் சிவமே எனத் தெளிந்துணர வல்லார்க்கல்லது ஆனந்தத் தேன் சுரக்கும் செந் தாமரை மலர்போலும் இறைவன் திருவடியை அடைந்து இன்புறுதல் ஏனேயோரால் இயலாது எ-று.

கான்-காடு. கோடி-துார அளவினைச் சுட்டி நின்றது. கடி-மனம் . வான்-விண். வானுறுமாமலர்-விண்ணளவும் மணம்வீசும் பெருமைவாய்ந்த நறுமலர்கள். இடுதல்-திருப் பெயர் கூறி அருச்சித்தல். ஊன்-உடம்பு ஊனின நீக்கி யுணர்தலாவது, ஆசிரியனது காணப்பட்ட உடம்புக்குரிய பெயர் முதலியவற்றை யொழித்து அவனைச் சிவமாகவே தெளிந்து வழிபடுதல். தேன் அமர் பூங்கழல்-நினைத் தொறும். எப்போதும் அனே த்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன்பிலிற்றும் இறைவன் திருவடி. செந் தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி, அந்தணனுவதுங் காட்டிவந்தாண் டாய்” என்றும் முன்னே யெனே யாண்ட பார்ப்பானே? என்றும் திருவாத வூரடிகள் குருவைச் சிவமாகக் கண்டு போற்றிய திறமும், உமாபதிசிவம் தமக்கு ஞானுேபதேசஞ் செய்தருளிய மறைஞான சம்பந்தரை நெஞ்சுவிடுதூது, போற்றிப்