பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

261


சிவனடியாராவார் தாம் கருவிற் புகுமுன்பே தம் தாய் தந்தையிருவராலும் யாமும் எம்மரபில் இனி வருவோரும் இறைவனுகிய உனக்கு வழிவழி ஆட்செய்தற்குரியர் என்று ஆவணவுரிமை செய்தளிக்கும் நினைவில் நான் முகனுற் படைக்கப்பெற்றுத் திருமாலால் காக்கப் பெற்று வளர்ந்தவர் என்பதனே இத்திருமந்திரத்தால் திருமூல தேவர் தம் கூற்ருக உரைத் தருள்கின்ருர் . எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமை யாண்ட பெம் மான்’ எனவரும் தேவாரமும்,

மோதொரு பாகஞர்க்கு வழிவழி யடிமை செய்யும்

வேதியர்குலத் துட்டோன்றி மேம்படு சடையனர்:

எனவும்,

அருமறை நாவல் ஆதிசைவ ரூைரன் ஒலை பெருமுளிை வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானு

மென்பால் வருமுறை teriseegt வழித்தொண்டு செய்தற்கோலை இருமையால் எழுதிநேர்ந்தேன் இதற்கிவை என்னெழுத்து.

எனவும் வரும் பெரியபுராணப் பகுதியும்,

  • மழவிடையாற்கு வழிவழியாளாப் மணஞ்செய்குடிப்பிறந்த

பழவடியாரொடும் கூடியெம்மானுக்கே பல்லாண்டு

கூறுதுமே?

எனவரும் திருப்பல்லாண்டும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கன. ஏழேழ் பிறவி - வினைப்பயன் தொடரும் ஏழு வகைப் பிறப்பு. எழுமை எழுபிறப்பும் என்ருர் திருவள்ளு வர். அன்றே அநாதியே. ஆவணம் - ஒலே; சாசனம், நேரெழுத்து - சாட்சிக் கையெழுத்து.