பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

6

2

திருமந்திரம்

1.

7

3

சிவயோகி ஞானி செறிந்த அத்தேசம் அவயோகம் இன்றி அறிவோருண் டாகும் நவயோகங் கைகூடும் நல்லியல் காணும் பவயோகம் இன்றிப் பரலோக மாமே.(1882)

சிவனடியார் வாழும் தேசம் செழிப்புறும் என்கின்றது.

(இ - ள்) சிவயோகியாகிய ஞானச்செல்வர் நிலையா கத் தங்கிய அந்த நாடு வீண்செயல்களிற் சேர்தலின்றி நல்லறிஞர்களேத் தன்கண் பெற்று விளங்கும். புதிய யோகப்பயன்கள் கைவரப்பெறும். சிறப்பென்னும் செம் பொருளின் தொடர்புடைய நல்லியல்புகள் தோன்றும். பிறவிச் சார்புடைய துன்பச்சார்பின்றி மேலான வீட் டுலகச் சார்பாகிய இன்பமே விளேவிக்கும் எ-று.

சிவயோகியாகிய சிவஞானி என்றது சிவனடி யாரை. செறிதல் - நிலையாகத் தங்குதல். தேசம் - நாடு. அவம் - வீண்செயல். யோகம் - சேர்தல். அறிவோர் - ஞானிகள் . நவம் - புதுமை. பவயோகம் - பிறப்புக்குச் சார்பாகிய பேதைமை முதலிய குற்றங்களின் சேர்க்கை. பரலோகம் - மேலான வீட்டுலகம்; என்றது அதலைாகிய பேரின்பத்தினே .

போசன விதி

உணவுண்ணும் முறைமையினே யுணர்த்துவது. தான் உண்ணும் முன் இறைவனுக்கும் அடியார்க்கும் அளித்து இந் நுகர்ச்சி சிவன் தந்தது என்னும் நினேவுடன் உண்ணுதல் முறை. தனக்கென்று உலேயேற்ருமல் சமைக் கும் பொழுதே அடியார்க்கு என்று சமைத்த உணவே உண்ணத்தக்க நல்லமிழ்தாகும்.