பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

263


174. எட்டுத் திசையும் இறைவ னடியவர்க்

கட்ட அடிசில் அமுதென் றெதிர்கொள்வர் ஒட்டி யொருநிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே. (1884)

இறைவனடியார்க்கெனச் சமைத்த அடிசில் எல்லார்க்கும்

அமுதாந்தன் மையது என் கின்றது.

(இ - ள்) எட்டுத் திசைகளிலும் உள்ள இறைவனடி யார்கள் திருவமுது செய்தற்கெனச் சமைக்கப்பெற்ற உண வினே யாவரும் இனிய அமிழ்தமாகக் கருதித் தாமே எதிர் வந்து ஏற்றுக்கொள்வர் , தமக்குரியதாக உரிமைகொண்டு ஒரு நிலத்தைச் சேர்ந்து ஆண்டு பயன் விளைவிப்பவர் அந்நிலம் பயிரேற்றப்பெருமல் தரிசாய்க்கிடத்தலே ஒரு பொழுதும் விரும்பமாட்டார்கள் எ - று.

இறைவனடியார்க்கென்று சமைக்கும் உணவு உயிர்த் தொகுதியாகிய எல்லா வயல்களிலும் ஏற்றிய பயிர்போல யாவர்க்கும் நுகர்ச்சியாகிய போகத்தை விளேக்கும் என் பார், இறைவன் அடியவர்க்கு அட்ட அடிசில் அமுது என்று எதிர் கொள்வர் என்ருர் . உயிர்த்தொகுதியாகிய விளே நிலம் எல்லாவற்றையும் தனக்கு உரியனவாக அவற்றுடன் பிரிவின்றி ஒட்டியுறையும் இறைவன் உயிர் களில் எந்த உயிரும் உணவாகிய விளேவின்றிப் பாழ் நில மாகக் கிடத்தலே விரும்பமாட்டான் என்பதனை ஒட்டி யொரு நிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக்கிடக்கில் விருப் பறியாரே என்ருர். இது பிறிதுமொழிதல் என்னும் அணி யின்பாற்படும். ஒட்டியொருநிலம் ஆள்பவர் என்றது உணரப்படுவாரோடு ஒட்டி வாழும் இறைவனையும், நிலம் என்றது உயிர்த்தொகுதியையும் குறித்தன. விட்டுக்கிடத் தல் - பயிர் செய்யப் பெருது பாழ்பட்டுக் கிடத்தல். அந் நிலையை நிலமாளும் இறை வ ன் விரும்ப மாட்டான்.