பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 திருமந்திரம்

வேண்டும் என்னும் நோக்கமேயாம். எனவே அண்டங் களிலுள்ள ஞாயிறு முதலிய எல்ல ச் சுடர்களுக்கும் ஒளி வழங்கும் ஆதித்தன் இறைவனே என்பது புலனும். சிவ பெருமான் திருவடி ஞாயிறு திங்கள் தீ விண்மீன் முதலிய வற்றுக்கெல்லாம் ஒளிவழங்கி அண்டத்துள் ஞாயிருய் விளங்குந் திறத்தை, மெய்ச் சுடருக்கெல்லாம் ஒளிவந்த பூங்கழல் உத்தரகோச மங்கைக் கரசே எனவரும் திரு வாசகத்தாலும்,

‘நாயகன் கண்ணயப்பால் நாயகி புதைப்ப எங்கும்

பாயிருளாகி மூடப் பரிந்து ல கினுக்கு நெற்றித் தூயநேத்திரத்தினலே சுடரொளி கொடுத்த பண்பிற் றேயமா ரொளிகளெல்லாம் சிவனுருத் தேசதென்னுர் 72 எனவரும் சிவஞான சித்தியாராலும், விரிகதிர் மதிய மொடு சுடர்கண்ணுக...... இயன்றவெல்லாம் பயின்றகத் தடக்கிய வேதமுதல்வன்? எனவரும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துத் தொடராலும் அறியலாம்.

பசு விலக்கணம்

177. அன்ன மிரண்டுள ஆற்றங் கரையினில் துன்னி யிரண்டுந் துனே ப் பிரியாதன தன்னிலே யன்னம் தனியொன்ற தென்றக்கால் பின்ன மடவன்னம் பேறனுகாதே. (2006) சிவனும் சீவனும் பிரியாது உடனுமாறு கூறுகின்றது.

(இ - ள்) ஆற்றின் கரையிலே இரண்டு அன்னப் பறவைகள் ஒருங்கே அமர்ந்துள்ளன. அ ைவயிரண்டும் தம்முள் நெருங்கித் துணேபிரியாதுள்ளன. தன்னியல்பி ன தாகிய ஆணன்னம் தனித்து வேறு பிரிந்திருப்பது என்றக் கால், அது பிரியவேறுபட்ட பெண்ணன்னம் வாழ்க்கைப் பேருகிய இன் பத்தினே அணுகப் பெருது எ - று.