பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

267


வாழ்க்கையாகிய ஆற்றின் கரையெனப்படும் உடம் பின் கண்ணே உயிரும் சிவமும் ஒன்றியுள்ளன. தன் னியல்பினனுகிய சிவன் உயிரின் வேருகப் பிரிந்துள்ளான் என்ருல், அவன் பிரியத் தனிப்பட்டுள்ள ஆன்மா சிவப் பேற்றினே அடைதல் இயலாது என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இப்பாடல் பிறிது மொழிதல் என்னும் அணியின் பாற்படும்.

இரண்டும் அன்னமாயினும் அவற்றின் வேற்றுமை தோன்றத் தன்னிலேயன்னம் என்றும் மடவன்னம் என் றும் அடைபுணர்த்தோ தினர். தன்னிலேய ன்னம் என்றது, எக்காலத்தும் தன்னியல்பில் மாரு துள்ள மெய்ப்பொரு ளாகிய சிவபரம் பொருளே. மடவன்னம் என்றது அநாதியே ஆணவமலத்தால் மறைக்கப்பட்ட அறிவினதா கிய ஆன்மாவை. துன்னுதல் - நெருங்குதல். பின்னம் - வேருதல், பேறு என்பது வீடுபேருகிய இன்பத்தினே.

  • பிரியா நண்பினையுடைய இரு பறவைகள் ஒரே கிளேயில் அமர்ந்துள்ளன. அவற்றுள் ஒன்று இனிய பழத்தைத் துய்க்கின்றது மற்றது உண்ணுது பார்த்துக் கொண்டிருக்கிறது ?? (இருக்குவேதம் 1-164. 20) என்னும் மறைமொழிப் பொருளே இத்திருமந்திரம் அறிவுறுத்தல்

காணலாம்.

ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை

178. அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில அஞ்சும் அடக்கில் அசேதன மாமென்றிட் டஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே. (2033)

ஐம்பொறிகளே யடக்கும் உபாயம் உணர்த்துகின்றது.