பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 திருமந்திரம்

(இ - ள்) பொறிகள் ஐந்தினேயும் பொருள் களிற் செல்ல விடாது அடக்குக அடக்குக என வறிதே கூறுவர். அவற்றை அடக்கும் முறையினையறியும் அறிவிலா தார். பொறிகள் ஐந்தையும் பொருள்களிற் செல்லாது கட்டுப் படுத்திய தேவர்களும் அங்கு இல்லே . அவ்வைந்தினையும் எப்பொருளிலும் செல்லாமல் அடக்கினல் ஆன்மா அறி வற்ற சடப்பொருள் போ லாய்விடும் என்பதுணர்ந்து ஐம் பொறிகளேயும் வீணே அடக்குதலின்றி அவை மெய்ப் பொருளேயே நோக்கும் இயல்பினவாகச் செலுத்தும் மெய் யுணர்வாகிய உபாயத்தினை அறிந்து கொண்டேன். எ-று.

அஞ்சு - ஐம்பொறிகள். அடக்குதல் - விடயத்திற் செல்லாதபடி தடுத்தல், அசேதனம் - அறிவில்லாதது . அடக்கா அறிவு - அடக்காமல் நல்வழியிற் செலுத்துதற்குத் துணையாகிய மெய்யுணர்வு.

சற்குரு 180. பரிசன வேதி பரிசித்த தெல்லாம்

வரிசை தரும்பொன் வகையாகு மாபோல் குருபரி சித்த குவலய மெல்லாம் திரிமலந் தீர்ந்து சிவகதி யாமே, (2054) குருவின் பரிச தீக்கையால் உயிர் மும்மலப் பிணிப்பகன்று தூய்மை பெறுமாறு உணர்த்துகின்றது.

(இ - ள்) பரிசனவேதி எனப்படும் குளிகை தொட்ட உலோகங்கள் யாவும் மாற்றுச் சிறப்பமைந்த பொன்னின் வகையாதல் போன்று, குரு பரிசித்த உலக வுயிர்கள் யாவும் மும்மலங்களும் நீங்கிச் சிவகதியாகிய வீடுபேற் றினைச் சேர்தற் குரியவாம் எ.று.

பரிசனவேதி - இரும்பு செம்பு முதலிய தாழ்ந்த உலோ கங்களே உயர்ந்த பொன்னக மாற்றும் ஒருவகை மருந்து.