பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

269


பரிசன வேதியாகிய குளிகையிற்ை பற்றப்பட்ட தாழ்ந்த உலோகங்கள் தாழ்வு நீங்கி உயர்ந்த பொன்னுய் ஒளிர்தல் போலக் குருவின் அருட்பரிசம் சார்ந்த உயிர்கள் மல மாயை கன்மங்களாகிய மாசுநீங்கிச் சிவப்பிரகாசம் பெற்றுத் திகழும் எ-று.

பரிசித்தல் - சிவோ கம்பாவனையிலிருந்து தன் கை யினைச் சிவனது கையாகப் பாவித்து, மாணவனது சிரத் தைத் தொடுதல். திரிமலம் - ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலம்.

கூடாவொழுக்கம்

தவத் தொடு பொருந்தாதாய தீயவொழுக்கம் 179. கண்காணி யில்லென்று கள்ளம்பலசெய்வார்

கண்காணி யில்லா விடயில்லே காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கு நின்ருனேக் கண்காணி கண்டார் களவொழிந்தாரே (2067)

தவத்தொடு பொருந்தாத தீய யொழுக்கத்தை நீக்குதற் குரிய உபாயம் உணர்த்துகின்றது .

( இ-ள்) தம்மைக் கண்காணிக்கும் தலைவராவார் எவ ரும் இங்கு இல்லையென்று கூடா வொழுக்கத்தினராய்க் கள்ளச் செயல்கள் பலவற்றையும் செய்வார்கள். ஆராய்ந்து நோக்குமிடத்து நம் செயல்களே உடனிருந்து மேற்பார்க்கும் தலேவகிைய இ ைற வ ன் இல்லாத இடம் எதுவுமில்லை. உயிர்களின் செயல்களைக் கண்காணித்து முறை வழங்கும் தலைவனுக (உயிர்களின் உள்ளத்தும் புறத் துமாய்) எங்கும் கலந்து நின்ற இறைவனைக் காணும் கண் ணுக்குக்காட்டும் கதிர்போல் உயிருள்ளும் நுகரும் பொருள் களிடத்தும் ஒப்பத் தங்கும் தல்வகைக் கண்டுண்ர்ந்தவர் கள் அவனே முன்னங் காணுமையால் தாம் மறைவிற் செய்த தீய செயல்களை விட்டொழியும் நல்லுண்ர்வின்ரா வர் எ-று.