பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 திருமந்திரம்

(இ -று) (ஐயறிவுடைய விலங்குகளிலும் உணர்விற் குறைந்த நாலறிவினதாகிய) வண்டு இனிய உணவினை ப் பருகி இன்புறுதல் வேண்டி மிகுந்த தேனேயுடைய மலரை அளேந்து மிக்க தேனைச் சேகரிக்கும் செயலின் மேன்மையினே (மாந்தர்) உணரமாட்டாராயினர். (ஏனேய தேன்போலாது புறத்தே சென்று பெறுதற்கில்லாததாய் நினைப்பார் நெஞ்சுள் இருந்து சுரந்து) வரும் தேனும் நாம் வாய்மடுத்துண்ணுத நிலையிலேயே நம் வாயிற் புகுந்து இனிக்கும் தேனும் (நினைத்தாலும் கண்டாலும் பேசிலுைம் சுவைதரும்.) அரிய தன்மை வாய்ந்ததும் ஆகிய தேனே ஒருவரும் அறிந்து நுகரமாட்டாராயினர். (அந்தோ அவர்தம் அறியாமை இருந்தவாறென்னே)

Gr-go.

வண்டு இன்புற மலர் இருந்தேன் அளந்து பெருந் தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார் அரும்தேனை யாரும் அறியகிலார் என இயையும். பெருந்தேன் - கொம்புத் தேனடை. இழைத்தல் - கட்டுதல். சாரற் கருங்கோற் குறிஞ்சிப்பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும்’ என்பது குறுந்தொகை பெற்றிமை-தன்மை; என்றது மலர்கள் பல வற்றிலும் சென்று தினத்தனேயுள்ள தோர் தேன் துளிகளே யெல்லாம் கொணர்ந்து ஓரிடத்திற் பெரிய தேனடையாகக் கட்டிச் சேர்த்து வைத்தலாகிய அரிய தொழிற்றன்மை யின. வரும்தேன், நுகராது வாய்புகுதேன், அருந்தேன் என்றது சிவானந்தமாகிய தேன.

தினத்தனை யுள்ளதோர் பூவினிற்றேனுண்ணுதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன் சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்று தாய் கோத்தும்பி3

எனவும்,