பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

273


'வருந்தேன் இறந்தும்பிறந்தும் மயக்கும்புலன் வழிபோய்ப்

பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன் புகழ் மாமருதிற் பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றி

லாசையின்றி இருந்தேன் இனிச்சென் றிரவே குெருவரை யாதொன்றுமே: (திருவிடை - 3) எனவும் வரும் திருப்பாடல்கள் ஒப்புநோக்கி உளங்கொ ளத் தக்கன.

நுகராது வாய்புகு தேன் - கிண்ணத்திலுள்ள தேனே எடுத்து நுகருமாறு போன்று நாம் தன்னை உட்கொள்ளாத நிலேயிலேயே தானே வலிய வந்து நம் வாயிற் புகுந்து அண்ணிக்கும்தேன். வள்ளத்தேன் போல நுன்னே வாய் மடுத்துண்டிடாமே? எனவும், எண்ணித் தம்மை நினைந் திருந்தேனுக்கு, அண்ணித்திட்டமுதுாறு மென்வுைக்கே? எனவும், நானே யாறுபுக் கேற்கவ னின்னருள் , தேனே யாறு திறந்தாலே யொக்குமே எனவும் கோனேக்காவிக் குளிர்ந்த மனத்தராய்த் தேனேக் காவியுண்ணுர் சில தெண்ணர்கள் எனவும்

'குரம்பை தோறும் நாயுட லகத்தே

குரம்பை கொண்டு இன்தேன் பாய்த்திதிரம்பிய

அற்புதமான அமுத தாரைகள் -

எற்புத் துளை தொறும் ஏற்றினன் (திருவாசகம்) எனவும் காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட் டாதே எனவும் வருவன இங்கு நினைக்கத்தகுவன.

இதோபதேசம்

183. செல்லுமளவுஞ் செலுத்துமின் சிந்தையை வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை இல்ல யெனினும் பெரிதுளன் எம்மிறை நல்ல அரனெறி நாடுமின் நீரே, (2103)