பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 திருமந்திரம்

மன மொழிகளால் இறைவனே வழிபட்டு நல்லொழுக்க நெறியில் நடப்பீராக என அறிவுறுத்துகின்றது.

(இ. ள்) இயலும் அளவு நும் சிந்தையினே இறைவன் பாற் செலுத்தித் தியானிப்பீராக. அம்முதல்வனது மெய்ப் புகழை நீவிர் கற்றுவல்ல சொல்வன்மைக்கேற்பச் சொல் லிப் போற்றுவீராக. (அம்முதல்வனைப் புறத்தே காணுமை யொன்றேபற்றி) இல்லை என்பார் உளராயினும் எம்மிறை வகிைய சிவபெருமான் இவ்வாறு சிந்தித்துப் போற்று வார்க்கு அவர்தம் உள்ளத்திலே பெரிதும் நிறைந்துள் ளான். உயிர்க்குயிராய் உள் நிற்கும் இறைவன் அறிவுறுத்தி யருளிய நல்ல ஒழுக்க நெறியினே நீவிர் நாடி ஒழுகு வீராக. எ - று.

செல்லும் அளவு - இயலும் அளவு; முடிந்தவள வு. ஒல்லும் வகையான் அறவினை யோ வாதே செல்லும் வாயெல்லாம் செயல்’ என்ருர் திருவள்ளுவ நாயனரும். எய்த நினையமாட்டேனன் என்ருர் ஆரூரரும். சிந்தை யைச் செலுத்துதலாவது இறைவனைத் தியானித்தல். வாய்மையை வல்ல பரிசால் உரைமின்கள் என இயைக்க வாய்மை என்றது-இறைவனது மெய்ம்மையாகிய பொருள் சேர் புகழ்த் திறங்களே. வல்ல பரிசு - கற்றுவல்ல தன்மைக் கேற்ப இல்லை எனினும் - இல்லை என்பார் உளராயினும் . எம்மிறை பெரிது உளன் - எம் இறைவன் உயிர்களின் உள்ளத்தின்கண் நீங்காதுள்ளான். * சுடர் விட்டுளன் எங்கள் சோதி’ என்பது திருப்பாசுரம். நல்ல அரனெறி - பொறிவாயில் ஐந்தவித்தாகிைய இறைவன் வகுத்தருளிய நல்ல ஒழுக்க நெறி. நாடுதல்-நாடி மேற்கொள்ளுதல்.