பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 திருமந்திரம்

பொருள்களே வினவி யடைதல் உலகியல்பு. அவ்வாறு எங்கும் அலேந்து திரிந்து அடைதற்குரிய நற்கதி புறத்தில் இல்லை; நும் மனத்தகத்திலேயே நிலைபெற்றுளது ஆதலின் இறைவனே மனத்தின் கண் மறவாது நினைத்தலொன்றே போதும் என்பார், சென்றே புகுங் கதி இல்லே? என்றும் நும் சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந்துய்மின் ? என்றும் கூறினர். சென்றே புகுங்கதி இல்லே எனவே நீர் அக்கதியை நாடிச் செல்லவேண்டிய இன்றியமை யாமையில்லே, சென்றடையாத திருவாகிய அச்சிவகதி தும்முள்ளத்திருந்து வெளிப்பட்டுத் தோன்றி நும்மை அகத்திட்டுக் கொள்ளும் என்பதாயிற்று.

185. இக்காயம் நீக்கி யினியொரு காயத்திற்

புக்குப் பிறவாமற் போம்வழி நாடுமின் எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கான தென் றக்காலம் உன்ன அருள் பெற லாமே, (2106) இதுவுமது .

(இ - ள்) பெறுதற்கரிய இம்மக்களுடம்பினைப் பயன் படுத்தி நன்னெறியினை யடையாது வீணே கழித்துவிட்டு இனி மேலும் ஒருடம்பினே எடுத்துப் பிறந்து வருந்தாமல் இவ்வுடம்பில் வாழும் இந் நிலேயிலேயே பிறப்பிறப்பில்லாத பெரு நெறியினத் தலைப்பட்டுச் செல்லும் வழியின நாடி மேற்கொள்வீராக. நாம் கொண்டுள்ள இந்த உடம்பு நமக்கு எந்தக் காலத்திலே வந்து பொருந்தியது என்று நுமது பிறவிக்குரிய மூல காரணத்தினை ஆராய்ந்து தெளிந்து இவ்வுடம்பினைவிட்டு உயிர் நீங்குங் காலத்திலும் இறைவனை மறவாது நினைந்து போற்றுதலால் அம்முதல் வனது திருவருள் வாழ்வாகிய சிவப்பேற்றினே (இப்பிறப் பிலேயே) பெற்று இன்புறலாம். எ - று.