பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

277


காயம் - உடம்பு. இக்காயம்-நாம் கொண்டுள்ள இவ் உடம்பு. நீக்கிப் புக்குப்பிறத்தல் என்ற சொற்கள் இவ் உடம்பினேவிட்டு உயிர் நீங்குங்கால் அடையுந்துன்பத்தினே யும் மற்ருேருடம்பிற்புக்குப் பிறக்குங்கால் மாதா வுதரத் தும் புறத்தும் அவ்வுயிர்படுந்துன்பங்களையும் குறிப்பிற் சுட்டி நின்றன. போம்வழி என்பது இனி மீண்டும் பிறவா மல் இறைவனோடு இரண்டறக் கலத்தலாகிய வாராவழி யினே . இதனே மற்றிiண்டு வாராநெறி' எனவும், வாரா வுலகு? எனவும், மீண்டு வாரா வழி எனவும் குறிப்பிடு வர் அருளாளர். எமக்கு இவ்வுடல் எக்காலத்து வந்து ஆனது என்று’ என்றது, தமக்கு இவ்வுடம்போடுளதாகிய தொடர்புக்கு யாது காரணம் என்று பிறவிக்குரிய கார ணத்தினையும் அத்தொடர்பினை நீக்குதற்குரிய சாதனத் தினையும் ஆராய்ந்து என்பதாம். அக்காலம் - உடம்பினே விட்டு உயிர் பிரியும் காலம். அன்று அறிவாம் என்னுது அறஞ்செய்க’ என்ருர் திருவள்ளுவர். அக்காலம் உன் னுதலாவது உடம்பினேவிட்டு உயிர் பிரியும் அத் துன்பக் காலத்திலும் இறைவனே அன்பில்ை மறவாது நினைத்தல். சாமன்றுரைக்கத் தருதி கண்டாய் எங்கள் சங்கரனே? என வரும் நாவுக்கரசர் விண்ணப்பம் ஈண்டு மனங்கொளத் தகுவதாகும். உன்ன - உன்னுதலால்; செயவெனச்சம் காரணப் பொருளில் வந்தது .

186. முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை

எத்தனே காலமும் ஏத்துவர் ஈசனே நெய்த்தலேப் பால்போல் நிமலனும் அங்குளன் அத்தகு சோதி யது விரும்பாாே. (21.15)

அருள்வான் என்கிறது.