பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 திருமந்திரம்

(இ - ள்) வீடு பேருகிய பயனுகவும் அதனேப் பயப் பிக்கும் ஞானமாகவும் அம்மெய்யுணர்வை நல்கும் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்த் திறங்க்ளாகவும் திகழும் இறைவனை (இடையருப் பேரன்புடையார்) எத்தனை நீண்டகாலமாயினும் இடையருது போற்றுவர். துரயோ கிைய இறைவனும் அங்ங்ணம் போற்றும் அன்பர் குழாத்திடையே நெய்யினை முந்துறக்கொண்டு விளங்கும் (கடையப்படும் தயிராகிய) பாலிற் போன்று வெளிப்பட்டு அருள்வன். அத்தகைய (அருமையில் எளிய) சோதிப் பொருளது அருளே விரும்பிப் பெரு தார் அந்தோ இரங்கத் தக்கவராவார் எ-று.

முத்தி-வீடுபேறு, ‘மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும், விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேருய் நின்ருனே? என்பது அப்பர் தேவாரம். இறைவன் ஞானமயன் என்பதனே ஞானத்திரளாய் நின்றபெருமான்’ எனச்சம்பந்தரும், ஞானம் ஆய்ை’ என அப்பரும் குறித்துப் போற்றுவர். இறைவன் முத்தமி ழாய் நின்ற திறத்தை முத்தமிழும் நான்மறையும் ஆன்ை கண்டாய்” என வரும் திருத்தாண்டகத்தா லுணரலாம். ஏத்தும் அடியார் கூட்டத்தில் இறைவன் வெளிப்பட்டு அருளுதலே வா யாரத் தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகத்தான் எனவும், தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணே பண்ணி நல்ல, முழவமொந்தை மல்குபாடல் செய்கையிடம் ஒவார்’ எனவும் வரும் திரு முறைத் தொடர்களால் உணரலாம். நெய்த்தலேப்பால். நெய்யினை முந்துறுத்துக்கொண்டு விளங்கும் நிலையில் (தயிராய்க் கடையப்பெற்றுள்ள) பால். விறகில் தீயினன்... முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே? என்பது அப்பக் அருள்மொழி,